கிட்னி முதல் இதயம் வரை பாதுகாக்கும் இந்த சட்னி -செய்யும் முறை

 

கிட்னி முதல் இதயம் வரை பாதுகாக்கும் இந்த சட்னி -செய்யும் முறை

கறிவேப்பிலை உடலில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச் சத்தானது சர்க்கரையின் அளவு மிகவும் சீராக வைத்திருக்கிறது. நார்ச்சத்து அதிகம் கிடைக்கும் பொழுது நார்சத்து என்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எப்பொழுதுமே சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.  கறிவேப்பிலை இயற்கையாகவே உங்களது சர்க்கரை வியாதிக்கு மருந்தாக வேலை செய்து ,கிட்னி முதல் இதயம் வரை பாதுகாக்கிறது .

கறிவேப்பிலை என்பது நாம் தினமும் சமைக்கக்கூடிய பலவிதமான உணவுப் பொருட்களிலும் சேர்ப்பது வழக்கம். முக்கியமாக குழம்பு, பொரியல் போன்ற அனைத்திலுமே, தாளிக்கும் பொழுது கருவேப்பிலை இல்லாமலேயே இருக்காது. அந்த அளவிற்கு நாம் கறிவேப்பிலையை அனைத்து உணவு வகைகளையும் சேர்த்து வந்துள்ளோம். கறிவேப்பிலை என்பது வாசனைக்காக மட்டுமே உபயோகிக்க கூடிய ஒரு வாசனை பொருள் என்றே நம்மில் பலரும் நினைத்து வருகிறோம். ஆனால் உண்மையிலேயே கருவேப்பிலையில் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.

கிட்னி முதல் இதயம் வரை பாதுகாக்கும் இந்த சட்னி -செய்யும் முறை

கருவேப்பிலை சட்னி செய்யும் முறை :

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – 1 கப்

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

வர மிளகாய் – 5

பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி

புளி – சிறிய துண்டு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.

பின்னர் உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.

அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும்.

பின்னர் நன்கு கழுவிய கறிவேப்பிலையை சேர்த்து வறுக்கவும்.

அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.

சிறிய துண்டு புளி கலந்து  அடுப்பை அணைத்து விடவும்.

ஆறவைத்த கலவையை உப்பு சேர்த்து  மிக்ஸியில் மைய அரைக்கவும், மிகவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு தாளித்து துவையலுடன் கலந்து இட்லி, தோசை, அல்லது சாதத்துடன்  பரிமாறலாம்.