ஸ்கேன் பண்ணாமலே உங்க கிட்னி கண்டிஷன் தெரிஞ்சிக்க இதை படிங்க

 

ஸ்கேன் பண்ணாமலே உங்க கிட்னி கண்டிஷன் தெரிஞ்சிக்க இதை படிங்க

கோடையில் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி என்றும்,  கிட்னி கெட்டுப்போனால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை பற்றி  காணலாம்.

ஸ்கேன் பண்ணாமலே உங்க கிட்னி கண்டிஷன் தெரிஞ்சிக்க இதை படிங்க

அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரின் நிறம் மாறுதல், சிறுநீரில் நெடி வீசுதல், சிறுநீரில் நுரை காணப்படுதல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுதல், கண்களைச் சுற்றி வீக்கம், பெலவீனம், அசதி, குமட்டல், வாந்தி பண்ணும் உணர்வு, சருமம் வறண்டு அரிப்பு ஏற்படுதல், ஹீமோகுளோபின் குறைதல், திடீரென உயர் இரத்த அழுத்தம் ஏற்படுதல், முதுகு வலி அல்லது அடிவயிற்றில் வலி ஆகியவை சிறுநீரக பாதிப்புக்கான சில அறிகுறிகளாகும்.

சிறுநீர் பிரச்னை 

நுரைபோன்ற சிறுநீர் வருவது, இயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, சிறுநீர் தொற்று ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது.   

வீக்கம்

உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போகும்போது கணுக்கால், கால், பாதம், கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது அடைப்பு ஏற்படும்.

சோர்வு / ரத்தசோகை

சிறுநீரகம் எரித்ரோபோய்டின் (Erithropoietin) எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது, ஆக்சிஜன், ரத்த சிவப்பு அணுக்களைக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. சிறுநீரகம் பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும். இதனால் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால்தான் சோர்வும் ரத்தசோகையும் ஏற்படுகின்றன.

தடிப்பு

சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும். இதனால் தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும்.

மூளையின் குறைந்த செயல்பாடுகள்

மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு,  மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும்.

குளிர்

ரத்தசோகை காரணமாக அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு தோன்றும். சிலருக்கு வெயில் சுட்டெரிக்கும் நேரத்திலும் தாங்க முடியாத அளவுக்கு குளிர் எடுக்கும்.

மூச்சுத்திணறல்

சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும், தேவையற்ற திரவம் குடலிலேயே தங்கிவிடுவதாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.