கிட்னி கெட்டு போயிட்டிருக்குன்னு காமிக்கும் அறிகுறிகள் -படிச்சவுடனே உஷாராயிடுங்க !

 

கிட்னி கெட்டு போயிட்டிருக்குன்னு காமிக்கும் அறிகுறிகள் -படிச்சவுடனே  உஷாராயிடுங்க !

​கால்கள், பாதங்களில் வீக்கம்

சிறுநீரகத்தின் பணி தொய்வடையும் போது பாதங்கள், கைகள் வீங்க தொடங்கும். உடலில் இருக்கும் நச்சுநீர் வெளியேறாமல் சோடியத்தின் அளவில் சமநிலை உண்டாகி நீர் தேக்கம் ஆகும். இதனால் வெளியேற வேண்டிய நச்சு நீர் கணுக்கால், கைகளில் தங்கி வீக்கத்தை உண்டாக்குகிறது.

கிட்னி கெட்டு போயிட்டிருக்குன்னு காமிக்கும் அறிகுறிகள் -படிச்சவுடனே  உஷாராயிடுங்க !

​ஒவ்வாமை, வயிறு கோளாறு

வயிற்று வலிக்கு பல காரணங்கள் உண்டு. அதனால் வெறும் வயிறு வலியை இதனோடு ஒப்பிடவே முடியாது என்றாலும், வயிற்று வலி உடன் குமட்டல் வாந்திஉணர்வு உண்டாவது இரத்தத்தில் கழிவுகள் கலந்ததற்கான அறிகுறிகளிலும் ஒன்று. இதனால் தான் ஒவ்வாமையை உண்டாக்கும். இதனால் சரியாக சாப்பிட முடியாமல் எடை இழப்பும் உண்டாகும்.

​வீக்கமான கண்கள்

சிறுநீரானது புரோட்டினை வடிகட்ட முடியாமல் உடல் முழுக்க பரவிவிடுவதால் அவை கண்களை சுற்றி வீக்கத்தை உண்டாக்கும். முகம் கூட வீக்கத்தை சந்திக்கும். உடல் எடை குறைந்திருக்கும் நிலையில் முகம் மட்டும் வீங்கியிருப்பதை நன்றாகவே உணர முடியும். குறிப்பாக கண்களை சுற்றி. ரத்த பரிசோதனை மூலம் சிறுநீரில் உள்ள குளோபுலின் அளவை பரிசோதிக்க முடியும்.

​இரவில் அடிக்கடி சிறுநீர்

சிறுநீரகங்களில் பணியில் தொய்வு உண்டாகும் போது அவை செயலிழக்கும் போது அடிக்கடி சிறுநீரை வெளியேற்றும். அதிலும் வெளிறிய நிறத்தில் இருக்கும். அவை சொட்டு சொட்டாகவும் இருக்கலாம். குறிப்பாக இரவு நேரத்தில் 4 முதல் 10 முறை வரை சிறுநீர் கழித்தாலும் அபாயம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

​நுரைத்து வரும் சிறுநீர்

சமயங்களில் வேகமாக சிறுநீர் கழிக்கும் போது நுரைத்து பொங்குவது உண்டு ஆனால் எப்போதும் அதிக நுரை அல்லது குமிழியாக வெளியேறினால் அதிகளவு புரதம் வெளியேறுகிறது என்று அர்த்தம்.

சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரகப்பையில் இருக்கும் சிறுநீர் முழுமையாக வெளியேற வேண்டும். ஆனால் இந்த பாதிப்பு இருக்கும் போது சிறுநீரகத்தை கழித்தாலும் அவை முழுமையாக வெளியேறாமல் இருக்கும். சிறுநீரகம் கழிக்காத உணர்வையும் அழுத்தத்தையும் உண்டாக்கும். அழுத்தி வெளியேற்றூம் போது நன்றாக இருக்கும். மீண்டும் இதே உணர்வு இருக்கும்.

​சருமத்தில் அரிப்பு

இயல்பாகவே சிறுநீரகமானது உடலில் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. ஆனால் சிறுநீரகங்கள் செயலிழக்கும் போது இரத்தத்தில் அதிகப்படியான நச்சுகள் தேங்கிவிடுகிறது. இதன் பாதிப்பை சருமத்தில் காண்பிக்கின்றன. அதிகப்படியான அரிப்பை சருமத்தில் உண்டாக்கி விடும். சாதாரணமாக இருக்காது அதிகப்படியான நமைச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் ஆனது, இந்த ரத்த நாளங்களின் உள் சுவர்களில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் நெஃப்ரான்களுக்கு ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதைப் பாதிக்கிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு சேர சேர அவற்றின் மேல் பகுதி தடிமனாகிக் கொண்டே போகும். விளைவு ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படும்.

இதனால் சிறுநீரகத்திற்கு தேவையான ரத்தம் செலுத்தப்படாமல் தடை செய்யப்படுகிறது. ஒரு கட்டத்தில் ரத்தம் செல்வது முழுவதும் நின்றுவிட்ட நிலையில் சிறுநீரகம் தன் செயல்பாட்டினை முற்றிலும் இழந்துவிடும். இதற்கு ஒரே தீர்வு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை. கூடுதலாக, சேதமடைந்த சிறுநீரகமானது, ரத்த அழுத்தம் அதிகரிப்பதன் விளைவாக உடலின் செயல்பாட்டிலும் பல்வேறு விதமான சேதங்கள் ஏற்படுத்துகிறது.

சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது சிறுநீரகக் கற்களின்  அறிகுறியாகும். எனவே உங்கள் சிறுநீரில் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் பழுப்பு நிறங்கள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. முதுகு, தொப்பை, பக்கவாட்டில் கடுமையான வலி ஏற்படுதல், சிறுநீர் பாதை குறுகலாக இருப்பதால் அதன் வழியாக கற்கள் வெளியேற முடியாமல் திணறும் போது ஒருவர் கடுமையான வலியை உணர்கிறார்.. அதுபோல தான் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் அது உங்களுடைய சிறுநீரில் சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்