பாஜகவுக்கு தாவுகிறார் குஷ்பு: உறுதிப்படுத்தும் அண்ணாமலை

 

பாஜகவுக்கு தாவுகிறார் குஷ்பு: உறுதிப்படுத்தும் அண்ணாமலை

குஷ்பு பாஜகவுக்கு தாவுகிறார் என்ற பேச்சு இருக்கும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலையின் கருத்து.

பாஜகவுக்கு தாவுகிறார் குஷ்பு: உறுதிப்படுத்தும் அண்ணாமலை

திமுகவில் இருந்த குஷ்பு அங்கு ஸ்டாலின் தன்னை ஓரங்கட்டப்பார்த்த நேரத்தில் காங்கிரசுக்கு தாவினார். காங்கிரசில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அப்போது தலைவராக இருந்த சமயம் என்பதால் அவரின் தீவிர ஆதரவாளராக இருந்தார். தேசிய செய்தித்தொடர்பாளர் என்ற பொறுப்புக்கும் வந்தார் குஷ்பு. ஆனாலும், ஈவிகேஎஸ்க்கு பிறகு அடுத்த தலைவர் வந்தபிறகு காங்கிரசில் குஷ்புவின் செல்வாக்கு குறைந்தது. கட்சியில் இருந்து தான் ஓரங்கட்டப்படுவதை உணர்ந்த குஷ்பு, ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவதை ஆதரித்து பேசினார். காங்கிரசை வெறுப்பேற்றவே இப்படி பேசிவந்தார். அடுத்ததாக, காங்கிரசுக்கு நேர் எதிரியான பாஜகவைவும், பாஜக அரசு கொண்டு வந்த புதிய கல்விக்கொள்கையையும் ஆதரித்து பேசி காங்கிரசில் மட்டுமல்லாது, புதிய கல்விக்கொள்கையை தீவிரமாக எதிர்த்து வரும் கூட்டணியான திமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தினார்.

பாஜகவுக்கு தாவுகிறார் குஷ்பு: உறுதிப்படுத்தும் அண்ணாமலை

இதனால் அவர் பாஜகவுக்கு தாவுகிறாரா என்று பேசப்பட்டு வந்த நிலையில், குஷ்புவின் கணவர் சுந்தர்.சி., தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசியதாக தகவல் கசிந்தது.

பாஜகவுக்கு தாவுகிறார் குஷ்பு: உறுதிப்படுத்தும் அண்ணாமலை

இந்த சந்திப்பு குஷ்பு பாஜகவில் இணையப்போவதை உறுதிப்படுத்தி இருக்கிறது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை, ‘’குஷ்பு மிகவும் தைரியமான பெண்மணி. அவரின் தைரியம் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு ஊக்கம் தரும். அரசியலில் பெண்களுக்கு தைரியமும், துணிச்சலும் அதிகம் தேவை. அது குஷ்புவிடம் நிறையவே இருக்கிறது. எந்த அரசியல் கருத்தாக இருந்தாலும் நல்ல புரிதலோடு துணிச்சலாக பேசக்கூடியவர். அவர் கட்டாயம் பாஜகவுக்கு வரவேண்டும்’’என்று சொல்லி இருக்கிறார்.

பாஜகவுக்கு தாவுகிறார் குஷ்பு: உறுதிப்படுத்தும் அண்ணாமலை

குஷ்பு பாஜகவுக்கு தாவுகிறார் என்ற பேச்சு இருக்கும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது அண்ணாமலையின் இந்த பேச்சு.