பாஜகவில் குஷ்பு ? – அரசியல் சேவைக்கா ? சொந்த ஆதாயத்துக்கா ?

 

பாஜகவில் குஷ்பு ? – அரசியல் சேவைக்கா ? சொந்த ஆதாயத்துக்கா ?

தமிழக அரசியலில் பாஜக உருவாக்கியுள்ள புதிய சலசலப்பு குஷ்பு பாஜகவில் இணைவது. குஷ்புவுக்கு, காங்கிரஸில் உரிய பொறுப்புகள் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்ததாகவும், அதனால் தற்போது பாஜகவில் இணைவதாகவும் கூறப்படுகிறது.

நடிகை குஷ்பு, பாஜகவில் இணைவது , பாஜகவுக்கு சாதகமா ? குஷ்புவுக்கு ஆதாயமா என அலசப்படும் நிலையில் குஷ்பு எதிர்பார்க்கும் உரிய அங்கீகாரம் என்பது என்ன என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கேள்வியாக உள்ளது.

பாஜகவில் குஷ்பு ? – அரசியல் சேவைக்கா ? சொந்த ஆதாயத்துக்கா ?

தமிழ் சினிமாவில், வேறெந்த நடிகையைவிடவும் மிக உச்ச நிலையை அடைந்தவர் குஷ்பு. தமிழ் ரசிகன் அவரை கொண்டாடியதில் கிடைத்த பொருளாதார பலன் உரிய அங்கீகாரமில்லையா ?
இந்திய அளவில் இதுவரை வேறு எந்த நடிகைக்கும் கோயில் கட்டியதில்லை. ஆனால் குஷ்புவிக்கு கோயில் கட்டினான் தமிழன். அது உயரிய அங்கீகாரமில்லையா ? ஆடை, ஆபரணங்களுக்கு பெயர் சூட்டுவது இருக்கட்டும், தான் உண்ணும் உணவில் கூட குஷ்பு இட்லி என கொண்டாடிய சமூகம் தமிழ் சமூகம். அதில் கிடைக்காத அங்கீரம் வேறு என்ன ? என ரசிகன் கேட்கிறான்.

கடந்த 10 ஆண்டுகளில் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட பின்னரும், அவருக்கான அங்கீகரம் குறைந்துவிடவில்லை. தொலைக்காட்சி தொடர்களில் பலவற்றில் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களோடு இணைந்து இருந்தவர்தானே..?

பாஜகவில் குஷ்பு ? – அரசியல் சேவைக்கா ? சொந்த ஆதாயத்துக்கா ?

திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட பின், அரசியலுக்கு நுழைந்தார். திமுகவில் இணைந்து 5 ஆண்டுகள் இருந்தார். அங்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என வெளியேறினார். அடுத்ததாக காங்கிரசில் இணைந்தார். அங்கு 6 ஆண்டுகள் செயல்பட்டபின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என பாஜகவில் இணைகிறார். அப்படியென்றால் அவர் எதிர்பார்க்கும் அங்கீரம் என்பதுதான் என்ன ?

திமுகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை, காங்கிரசிலும் கிடைக்கவில்லை. தேர்தலில் நிற்பதற்குதான் வாய்ப்பில்லை. மாநிலங்களவை வாய்ப்புகளாவது கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை. பின் எதற்கு அந்த கட்சிகளில் இருக்க வேண்டும் என வெளியேறுகிறார் என்று கூறுகிறார்கள்.

பாஜகவில் குஷ்பு ? – அரசியல் சேவைக்கா ? சொந்த ஆதாயத்துக்கா ?

தனது திரைநட்சத்திர புகழை வைத்து, குறுகிய காலத்தில் அரசியல் உச்சத்தை அடைந்துவிட வேண்டும் என அவர் நினைத்திருக்கலாம். அது நிறைவேறவில்லை என்பதால், தற்போது பாஜக அவையை அலங்கரிக்க செல்ல உள்ளார். பாஜகவில் அவருக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்படலாம். தேர்தலில் போட்டியிடலாம், அல்லது மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கப்படலாம் என்கிற வாக்குறுதிகள் கிடைத்திருக்கலாம். ஆனால் அதுதான் அவருக்கான அங்கீகாரமா ? என மக்கள் கேட்கிறார்கள்.

பாஜகவில் குஷ்பு ? – அரசியல் சேவைக்கா ? சொந்த ஆதாயத்துக்கா ?

திமுகவில் இணைந்தபோது தனது அரசியல் கருத்துகளை அழுத்தம் திருத்தமாக சொல்பவர் என பெயரெடுத்தார். காங்கிரசில் இருக்கும்போதும் தனது கருத்துகளை தயங்காமல் சொல்லும் தன்மை கொண்டிருந்தார். பாஜகவில் அப்படி துணிந்து கருத்துகளை சொல்வாரா ? பாஜகவின் மதவாத அரசியலை கடுமையாக விமர்சித்து வந்த அவர், தற்போது, தனது வாயால் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பாரா ? என கேள்வி கேட்கிறார்கள் மக்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியல் அனுபவம் இல்லாத குஷ்பு 5 ஆண்டுக்கு ஒரு முறை கட்சி மாறுவது மக்கள் சேவைக்கா ? தனது சொந்த ஆதாயத்துக்கா என ரசிகர்கள் கேட்பதிலும் உண்மையில்லாமல் இல்லை. – தமிழ்தீபன்