’மாமியார் வீட்டுக்குப் போக திட்டமா எனக் கேட்டவருக்கு பதிலடி தந்த குஷ்பு

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருப்பவர் குஷ்பு. இவர் ட்விட்டரின் ஆக்டிவாக இருப்பார். புதிய செய்திகள் பதிவிடுவதுடன் அதற்கு கமெண்ட் சொல்பவருக்கு பதில் சொல்வது, தனக்குப் பிடித்த பதிவுகளை ரீட்விட் செய்வது குஷ்புவின் வழக்கம்.

அப்படிச் சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையை வரவேற்று இவர் பதிவிட்ட ட்விட் பெரிய விவாதத்தையே கிளப்பிவிட்டது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வரை அது குறித்து கருத்து சொன்னார். மேலும் தோழமை கட்சிகளைச் சேர்ந்தவர்களும் குஷ்புவின் கருத்து குறித்து பதிவிட்டிருந்தார்கள்.

அவற்றிற்கு குஷ்புவே விளக்கம் சொல்லி அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்போது குசும்பாக ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலடி தந்திருக்கிறார் குஷ்பு.

குஷ்பு வேறு கட்சிக்குச் செல்லவிருக்கிறார் என்கிற யூகச்செய்தி பரவலாக கடந்த சில வாரங்களாகவே சென்றுகொண்டிருக்கிறது. அதைக் கேட்பதுபோல கிண்டல் செய்திருக்கிறார் Mighty Blow என்பவர்

’மாமியார் வீட்டுத் திரும்ப திட்டமா? நான் அதிமுக வைச் சொல்கிறேன்’ (Planning to come back to mamiyar veedu? I mean ADMK) என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலடியாக, ’உன் அம்மா வீடு எங்கே இருக்கு?’ எனப் பதிவிட்டிருக்கிறார்.

பொதுவாக, போலீஸ் ஸ்டேஷனைத்தான் மாமியார் வீடு என்று சொல்வார்கள். அப்படி கேட்டபோதும் துணிவோடு பதில் அளித்திருக்கிறார் குஷ்பு.

குஷ்புவின் பதிலுக்கு கமெண்டில் பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

 

 

 

 

https://twitter.com/khushsundar/status/1289895140237049857

Most Popular

ரூ.15 லட்சத்துடன் கொள்ளையர்கள் ஓட்டம்… மடக்கி பிடித்த பொதுமக்கள்!- சென்னையில் சினிமாவை விஞ்சிய சம்பவம்

சென்னையில் பட்டப்பகலில் 15 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சினிமா விஞ்சம் அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை ராயபுரம் ஆதம் தெருவைச் சேர்ந்த சாகுல் அமீது (29)...

தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்க : எம்பி திருமாவளவன் வலியுறுத்தல்!

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் இருபது வீடுகள்...

திருப்பதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பொது முடக்க தளர்வுகளின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கோவில் ஊழியர்கள் முதல்...

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு கிடந்த உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும்...