Home அரசியல் எம்.பி.,- எம்.எல்.ஏ கனவில் குஷ்பு- பாஜக விரிக்கும் வலையில் சிக்குகிறாரா?

எம்.பி.,- எம்.எல்.ஏ கனவில் குஷ்பு- பாஜக விரிக்கும் வலையில் சிக்குகிறாரா?

குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக பரவி வரும் தகவல்கள் தமிழக அரசியலில், தற்போதைய பரபரப்பான விஷயங்களில் ஒன்றாக உள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ள குஷ்பு, அக்கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி உள்ள நிலையில், கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், அவர் பாஜக பக்கம் தன் இருப்பை மாற்றலாமா என யோசித்து வருகிறார் என கூறுகிறார்கள். அதற்கு காரணமாக, பாஜக தலைவர் எல். முருகனுடன் சமீபத்தில் சுந்தர் சி. சந்தித்த நிகழ்வை குறிப்பிடுகிறார்கள்.

சுந்தர்.சி தனது நண்பர் வீட்டுக்குச் சென்றதாகவும், அப்போது எல்.முருகனும் அங்கு வந்ததால், எதார்த்தமான சந்திப்புதான் என கூறப்படுகிறது. ஆனால், அதற்கு பின்னால் குஷ்புவின் அரசியல் எதிர்காலம் இருப்பதாக சொல்கிறார்கள்.

திரையுலக பயணங்களை குறைத்துக் கொண்டு , தீவிர அரசியலில் கவனம் செலுத்த தொடங்கிய குஷ்பு, கடந்த 10 ஆண்டுகளில் பெரிதாக சோபிக்கவில்லை. 2010 ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த அவருக்கு, அங்கு தலைமைக் கழகப் பேச்சாளர் பொறுப்புதான் அளிக்கப்பட்டது. 2011 சட்டசபை தேர்தல் மற்றும், 2014 நாடாளுமன்ற தேர்தல்களில் திமுகவுக்காக பிரசாரம் செய்தார். அப்போது, தனக்கு நாடாளுமன்ற வேட்பாளர் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், கட்சியில், புதிதாக சேர்ந்த அவருக்கு வாய்ப்பு வழங்க சீனியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பெரும் பிரச்சினைகளுடன் திமுகவில் இருந்து வெளியேறினார்.

அதன் பின்னர், தேசிய கட்சியில் இணைந்து பணியாற்ற விருப்பம் என அதிரடியாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போதே குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக அரசல் புரசலாக கூறப்பட்டது. ஸ்மிருதி ராணி, சுஸ்மா ஸ்வராஜ் போன்றோர் மூலம் முயற்சி செய்ததாக கூறப்பட்டது. அவரது வருகையை, அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை விரும்பவில்லை என்பதால் பாஜகவில் சேர்வது தடைபட்டதாக அரசல் புரசலாக பேசப்பட்டது.

அதன்பின்னதான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அங்கு, தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டதால், தமிழக அரசியல் களத்தில் பணியாற்ற வாய்ப்பு இல்லாத சூழல் இருந்தது. அங்கும் , மூத்த தலைவர்கள், பல தலைமைகளை தாண்டி பெரிதாக ’ஸ்கோர்’ செய்ய முடியவில்லை. 2016 சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதன் பின்னர்,2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட ஒதுக்கப்பட்ட 10 இடங்களில் தனக்கும் ஒரு வாய்ப்பிருக்கும் என எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை. அதனால், பிரசாரத்துக்கு செல்வதற்கு கூட குஷ்பு ஆர்வம் காட்டவில்லை என அப்போது பேசப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் பிரசாரங்களில் கூட கலந்து கொள்ளவில்லை. இப்படியாக காங்கிரசில் தனது நடவடிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக குஷ்பு குறைத்துக் கொண்டார்.

சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வந்ததையும், கடந்த சில மாதங்களாக குஷ்பு குறைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கு குஷ்பு மறுப்பு தெரிவித்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருந்தாலும், தனது சினிமா பின்புலத்தை வைத்து எம்.பி., அல்லது எம்.எல்.ஏ. ஆக முடியாத வருத்தம் அவரிடம் இருக்கிறது.

இதற்கிடையே, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு வரவேற்பு அளித்து அவர் போட்ட பதிவுகள், சொந்த கட்சியினரிடத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தன. அதனால், கடந்த சில மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டு வந்தார். மறைந்த எம்.பி., வசந்தகுமார் அஞ்சலி நிகழ்ச்சிக்குக் கூட அவர் அழைக்கப்படவில்லை. இப்படியான புறக்கணிப்புகளை காங்கிரஸ் கட்சியில் அவர் எதிர் கொண்டுள்ளார்.

இந்த சூழலில்தான், சுந்தர்.சி- எல்.முருகன் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கிடையே தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், குஷ்பு பாஜகவில் இணைவதை வரவேற்கிறோம் என குறிப்பிட்டது கவனம் பெற்றுள்ளது. குஷ்பு மிகவும் தைரியமான பெண்மணி என்றும் அரசியலில் பெண்களுக்கு தைரியமும் துணிச்சலும் மிகவும் முக்கியம். அது அவரிடம் நிறையவே உள்ளது என்றும் அண்ணாமலை பாராட்டியுள்ளார்.

தமிழக பாஜகவை பொறுத்தவரை , இந்த ஆண்டு இறுதிக்குள் கட்சிக்கு கூடுமானவரை வலு சேர்ப்பது என்கிற இலக்கை வைத்துள்ளது. அந்த வகையில் குஷ்பு வந்தால், அவருக்கு முக்கிய பதவியும்,தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் அளிக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது வேறு மாநிலங்களில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு என்கிற உத்தரவாரம் அளிக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு வைக்கப்படுகிறதாம்.

தனக்கு பிறகு, சினிமாவுக்கும், அரசியலுக்கும் வந்த ஊர்மிளா, திவ்யா, ரோஜா போன்ற நடிகைகளை அரசியலில் முக்கிய இடத்தை பெற்றுள்ளதைப் போல தன்னால் பெற முடியவில்லை என்கிற ஆதங்கம் குஷ்புவுக்கு உள்ளது. அந்த ஏக்கத்தை தமிழக பாஜக தீர்த்து வைக்கப்போகிறதா என்கிற கேள்விக்கு வரும் நாள்களில் பதில் கிடைக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

-தமிழ்தீபன்

மாவட்ட செய்திகள்

Most Popular

குன்னூர் அருகே நாட்டுவெடி வெடித்து விபத்து – தொழிலாளி படுகாயம்

நீலகிரிது குன்னூர் அருகே காட்டுப்பன்றிகளை தடுக்க வைத்திருந்த நாட்டுவெடிகள் வெடித்து சிதறியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த...

உதயநிதியை முதல்வராக்குவதே ஸ்டாலினின் சிந்தனை – அமித்ஷா

விழுப்புரத்தில் சிங்காரவேலர் சிலைக்கு அடிக்கல் நாட்டி, உருவப்படத்தை திறந்து வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார் அதன்பின் அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில்...

கோயில் திருவிழாவில் தொழிலாளி மீது தாக்குதல் – 5 பேர் கைது

தென்காசி தென்காசி அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். தென்காசி மாவட்டம்...

தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தற்போது அமலில் இருந்த ஊரடங்கு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது உருமாறிய...
TopTamilNews