கோலியா…. தினேஷ் கார்த்திக்கா- யார் வெல்வார் இன்று? #IPL #KKRvsRCB

 

கோலியா…. தினேஷ் கார்த்திக்கா- யார் வெல்வார் இன்று? #IPL #KKRvsRCB

ஐபிஎல் தொடரில் இன்று முக்கியமான போட்டி காத்திருக்கிறது. இன்று மோதிக்கொள்ளப்போவது கோலி தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்.

பெங்களூர் அணி இதுவரை ஆறு போட்டிகளில் ஆடி, நான்கில் வென்று 8 புள்ளிகளோடு 4 -ம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியும் ஆறில் விளையாடில் நான்கில் வென்றிருந்தாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் 3-ம் இடத்தில் உள்ளது.

கோலியா…. தினேஷ் கார்த்திக்கா- யார் வெல்வார் இன்று? #IPL #KKRvsRCB

பெரிய வித்தியாசமும் இல்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி -0.820 புள்ளிகளும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி -0.0017 புள்ளிகளிலுமே உள்ளன. அதனால், இன்று யார் வெல்கிறார்களோ… அவர்கள் முந்திச் செல்ல வாய்ப்பிருக்கிறது. எனவே இன்றைய வெற்றிக்கு இரு தரப்பும் கடும் போராட்டத்தை மேற்கொள்ளும்.

பெங்களூர் அணியின் ஓப்பனிங்கில் புதுமுக வீரர் தேவ்தத் படிக்கல் நிலையான ஆட்டத்தை வெளிப்பத்துகிறார். அவருக்கு ஜோடியாக அனுபவம் வாய்ந்த ஆரோன் பின்ச். அவர்களை அடுத்து, கோலி, டி வில்லியர்ஸ், ஷிவம் டுபெ என பேட்டிங்கில் ஸ்ட்ராங்காவே உள்ளது. ஆனால், மிடில் ஆர்டரைக் கடந்து கடைசியில் ஓரளவு சமாளிக்க ஆட்கள் இல்லை என்பது சறுக்கல். ஓப்பனிங் பார்டனர்ஷிப் குறைந்தது 5 ஓவருக்கு விக்கெட் பறிக்கொடுக்காமல் ரன்ரேட்டையும் குறைய விடாமல் ஆடினால் அதிக ஸ்கோரை எட்ட முடியும்.

கோலியா…. தினேஷ் கார்த்திக்கா- யார் வெல்வார் இன்று? #IPL #KKRvsRCB

பவுலிங்கில், சைனி, சஹல் ஒரு பக்கம் விக்கெட்டுகளை வீழ்த்த வாஷிங்டன் சுந்தர் ரன்களைக் கட்டுப்படுத்த சூழலுக்குத் தகுந்த வாறு வீச ஷிவம் டுபெ, உடானா என பவுலிங் வலிமையாக உள்ளது.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை பெரும் பிரச்னையாக இருந்தது ஓப்பனிங்கில் சொதப்பிய சுனில் நரேன். அவரை பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பின்வரிசையில் இறக்கினார்கள். ராகுல் திரிபாதியும் கில்லும் ஓப்பனிங் ஆடைனார்கள். ரானா, மோர்கன், தினேஷ் கார்த்திக் என நல்ல பேட்டிங் ஆர்டர் இருக்கிறது. ஆனால், ரானா, ரஸல் ஆகியோர் ஃபார்ம் அவுட்டில் இருப்பது சிக்கல்.

கோலியா…. தினேஷ் கார்த்திக்கா- யார் வெல்வார் இன்று? #IPL #KKRvsRCB

பஞ்சாப்புக்கு எதிராக 164 எனும் குறைவான ஸ்கோரை எடுத்திருந்தாலும் பவுலிங்கில் மிரட்டி வென்றார்கள். குறிப்பாக, கிம்மன்ஸ், சுனில் நரேன், வருன் சக்கரவர்த்தி, கிருஷனா ஆகியோர் எகானாமி 7 யை ஒட்டியே காத்தார்கள். அதுவே அன்றைய வெற்றிக்கு முக்கியக் காரணம். இன்றும் அது தொடருமா என்பது பொறுத்தே கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ரஸல் ஃபார்ம்க்கு வர வேண்டும் அல்லது ஒரு டவுண் முன்கூட்டி ஆட வேண்டும். அப்போது சில பந்துகளை நிதானித்து ஆட வாய்ப்பிருக்கும்.

கோலியா…. தினேஷ் கார்த்திக்கா- யார் வெல்வார் இன்று? #IPL #KKRvsRCB

இரண்டு அணிகளுமே இறுதி வரை போராடும் தன்மையுள்ளவை என்பதால், டாஸ் வின் பண்ணி முதலில் பேட்டிங் பிடிக்க வாய்ப்புள்ள அணிக்கு வெற்றிக்கும் வாய்ப்பிருக்கிறது.