கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாக்கும், தங்கம் வென்ற மாரியப்பனுக்கும் கேல் ரத்னா விருது: முழு விவரம் உள்ளே!

 

கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாக்கும், தங்கம் வென்ற மாரியப்பனுக்கும் கேல் ரத்னா விருது: முழு விவரம் உள்ளே!

விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் கேல் ரத்னா விருது விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு துறை சார்ந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் பெயரும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் உள்ளிட்டோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாக்கும், தங்கம் வென்ற மாரியப்பனுக்கும் கேல் ரத்னா விருது: முழு விவரம் உள்ளே!

இந்த நிலையில் கேல் ரத்னா விருதுகள் மற்றும் அர்ஜுனா விருதுகள் யாருக்கு வழங்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் மாரியப்பனுக்கும், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவுக்கும் , மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்க்கும் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மாவுக்கும், ஹாக்கி வீராங்கனை ராணிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாக்கும், தங்கம் வென்ற மாரியப்பனுக்கும் கேல் ரத்னா விருது: முழு விவரம் உள்ளே!

மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா, வீராங்கனை தீப்தி ஷர்மா,தடகள வீராங்கனை டூட்டி சந்த், துப்பாக்கிச் சுடுதல் மனு பாக்கருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக விளையாட்டுத்துறையின் பல்வேறு பிரிவுகளில் 27 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரும் 29 ஆம் தேதி காணொளி வாயிலாக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.