முதல்வரை சந்தித்து ஆசிப்பெற்ற பின் வேட்பு மனுதாக்கல் செய்த கேஜேஆர் ராஜேஷ்!

 

முதல்வரை சந்தித்து ஆசிப்பெற்ற பின் வேட்பு மனுதாக்கல் செய்த கேஜேஆர் ராஜேஷ்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் கொரோனா பொதுமுடக்கத்தால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்த முடியாமல் தள்ளிப்போனது. இதனிடையே நவம்பர் 22-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்தார். தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

முதல்வரை சந்தித்து ஆசிப்பெற்ற பின் வேட்பு மனுதாக்கல் செய்த கேஜேஆர் ராஜேஷ்!

தலைவர் பதவிக்கு என்.ராமசாமி என்கிற முரளி போட்டியிடுகிறார். இதே அணி சார்பில் செயலாளர்கள் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன், கே.ஜே.ஆர்.ராஜேஷ் ஆகியோரும், துணைத் தலைவர்கள் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஸ், மைக்கேல் ராயப்பன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயினும் போட்டியிடுகின்றனர். இதேபோல் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 21 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் உரிமையாளர் ராஜேஷ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.