விராட் கோலி அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல் #IPL_UPdate

 

விராட் கோலி அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல் #IPL_UPdate

ஜபிஎல் 2020 போட்டிகள் கொரொனாவால் ஒத்திவைக்கப்பட்டன. ஐக்கிய அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதியிலிருந்து போட்டிகள் தொடங்குகிறது. போட்டியில் ஆடும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்து அணி வீரர்களும் ஐக்கிய அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐபிஎல் அணிகளில் முக்கியமானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் தலைமையில்தான் இந்த அணி ஐபிஎல் போட்டிகளில் களம் இறங்குகிறது.

விராட் கோலி அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல் #IPL_UPdate
virat kholi PC: Twiiter

விராட் கோலியோடு டி வில்லியர்ஸ், ஆரோன் ஃபின்ச், மொயின் அலி, பார்த்திவ் பட்டேல், சோஹல், கென் ரிச்சர்ட்சன், வாஷிங்டன் சுந்தர், பவன் நெகி என திறமைகளின் பெரும் பட்டாளமே இந்த அணியில் உள்ளது.  

நம்பிக்கையோடு களம் இறங்க காத்திருந்த நேரத்தில் அணியில் ஒரு மாற்றம் நிகழபோகிறது. ஆம், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் அணியிலிருந்து விலகியுள்ளார்.

விராட் கோலி அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல் #IPL_UPdate
Kane Richardson PC: Twiiter

ரிச்சர்ட்சனுக்கு கொரோனா அல்லது கருத்து மோதல் என நெகட்டிவான காரணங்கள் ஏதும் இல்லை. ரிச்சர்ட்சன் மனைவிக்கு குழந்தைப் பிறக்கப்போகிறது. தான் அப்பா ஆகும் நேரத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என நினைத்த ரிச்சர்ட்சன், அணியிலிருந்து விலகியுள்ளார்.

விராட் கோலி அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல் #IPL_UPdate
Adam Zampa PC: Twiiter

ரிச்சர்ட்சனுக்குப் பதில், ஆஸ்திரேலிய நாட்டின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

ஆடம் ஸாம்பாவை மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறார் கேப்டன் விராட் கோலி.

வேகப்பந்து வீச்சாளருக்குப் பதில் சுழற்பந்து வீச்சாளரைச் சேர்ப்பது அணிக்கு பின்னடைவாக இருக்குமா என்ற கேள்வி எழுவது இயல்புதான்.

ஆனால், ஐக்கிய அமீரகத்தில் உள்ள மைதானங்களில் பெரும்பாலும் ஸ்பின் பவுலிங்குக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டவை. அதனால், ரிச்சர்ட்சனுக்குப் பதில் ஸாம்பாவின் வருகை பின்னடைவை ஏற்படுத்தாது என்றே கணிக்கிறார்கள்.