சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல்

 

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல்

ஐபிஎல் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் யாரும் கணிக்க முடியாத அளவுக்கு போட்டியின் தன்மை இருக்கிறது. பலம் கொண்ட அணி எனப் பலரும் கூறும் அணி அன்றைய போட்டியில் தோற்கிறது.  யாருமே கவனம் செலுத்தாத சிறிய அணி அசத்தலான வெற்றியைப் பெறுகிறது.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல்

ஐபிஎல் அணிகளில் குறிப்பிடத்தகுந்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத். மூன்றாம் போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொண்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.  ஜானி பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே நன்கு விளையாடிய போதும், பெங்களூரு அணியின் டி வில்லியர்ஸ் பேட்டிங், சோஹலின் பவுலிங்கால் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல்
Mitchell Marsh PC: Twitter

அன்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் மிட்சேல் மார்ஸ் காயம் பட்டார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்ஸ் இதுவரை ஆடிய 21 ஐபிஎல் போட்டிகளில் 225 ரன்களையும், 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மார்ஸ்க்கு காயம் குணமடையும் நிலையில் இல்லாததால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார்.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல்

மிட்சேல் மார்ஸ்க்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளார். இந்தச் செய்தியை அந்த அணியே அதிகாரப்பூர்வமாக அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.