இலங்கை LPL போட்டியிலிருந்து முக்கிய வீரர் விலகல்!

 

இலங்கை LPL போட்டியிலிருந்து முக்கிய வீரர் விலகல்!

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் போலவே, இலங்கையில் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள், 2012 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. ஐந்து அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது. கிட்டத்தட்ட ஐபிஎல் போட்டிகளைப் போலவேதான்.

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 26 -ம் தேதி தொடங்கும் எல்.பி.எல் தொடரில் டிசம்பர் 10-ம் தேதி வரை லீக் போட்டிகளும், டிசம்பர் 13 மற்றும் 14 -ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், டிசம்பர் 18-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற விருக்கிறன.

இலங்கை LPL போட்டியிலிருந்து முக்கிய வீரர் விலகல்!

இதில் கண்டி டஸ்கர்ஸ் டீமின் முதன்மையான வீரராக திகழ்பவர் மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கிறிஸ் கெயில். அதிரடி ஆட்டத்திற்கு புகழ் பெற்ற கெயில் ஓர் அணியில் இருப்பது பெரும் பலம். சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார் கிறிஸ் கெயில். தொடக்க போட்டியில் அவர் பங்கேற்காத நிலையில் அந்த அணி தோல்வியைச் சந்தித்தது. கெயில் உள்ளே வந்ததும் வெற்றிகளாகத் தொடர்ந்தது. குறிப்பாக, மும்பை அணியோடு சூப்பர் ஓவரின் அசத்தினார் கெயில்.

இலங்கை LPL போட்டியிலிருந்து முக்கிய வீரர் விலகல்!

கண்டி டஸ்கர்ஸ் அணி கெயிலை பெரிதும் நம்பியிருந்த நிலையில் அவர் தனிப்பட்ட காரணத்தால் எல்.பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. கொரோனா தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் எல்.பி.எல் போட்டிகளிலிருந்து இன்னும் சில வீரர்கல் விலக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.