ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…கலக்கத்தில் சாமானிய மக்கள்!!

 

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…கலக்கத்தில் சாமானிய மக்கள்!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது சாமானிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…கலக்கத்தில் சாமானிய மக்கள்!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ,பருப்பு ,பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் மானியம் தான். மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவின்படி தான் அனைத்து மாவட்டத்திற்கும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மத்திய அரசு பொது விநியோக திட்டத்தில் அளிக்கப்படும் மண்ணெண்ணெய் அளவை தற்போது குறைந்துள்ளது. ரேஷன் கார்டு ஒன்றுக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில் மத்திய அரசு அளவு குறைத்துள்ளதால், ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெயை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரை லிட்டர் மண்ணெண்ணெய் தான் கிடைத்துள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…கலக்கத்தில் சாமானிய மக்கள்!!

ஆனால் இது மக்களுக்கு தெரிவிக்கப்படாத நிலையில் அவர்கள் இதுகுறித்து புகார் கூறி வருகிறார்கள். இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்து வந்த மண்ணெண்ணெய் அளவு தற்போது 20 சதவீதமாக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டிய மழை அளவை குறைக்க வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்ணெண்ணெய் அளவு குறைவாக அளிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுவதை தவிர்க்கும் வகையில் நியாயவிலை கடைகளில் விளம்பரம் செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.