’’கொரோனாவுடன் வாழப்பழகுவது என்ன… நான் குடித்தனமே நடத்துகிறேன்’’-ஆச்சரியப்படுத்தும் கேரள இளைஞர்!

’’கொரோனாவுடன் வாழப்பழகுவது என்ன… நான் குடித்தனமே நடத்துகிறேன்’’-ஆச்சரியப்படுத்தும் கேரள இளைஞர்!

கொரோனா! கடந்த 10 மாதங்களாக உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது இந்தப்பெயர். ஆனால், இந்தப்பெயரை செல்லமாக கூப்பிட்டு கொஞ்சிக்கொண்டிருக்கிறார் ஒருவர். அதுவும் இன்று நேற்றல்ல, கடந்த 10 வருடங்களாக.

’’கொரோனாவுடன் வாழப்பழகுவது என்ன… நான் குடித்தனமே நடத்துகிறேன்’’-ஆச்சரியப்படுத்தும் கேரள இளைஞர்!

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஒரு பெண்ணின் பெயர்தான் கொரோனா. 34 வயதான அப்பெண் கேரளா கோட்டயம் மள்ளுசேரி அம்புரோஸ் நகரில் வசித்துவருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஷைன்தாமஸ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு 9,7 வயதுகளில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

கொரோனா என்றால் கிரீடம் என்று அர்த்தமாம். புனித ஜோசப் பேராலய அருட்தந்தை வைத்த இந்த பெயரை கேட்டதும் 34 ஆண்டுகள் வரையிலும் அதிராத எவரும் இப்போது அதிர்ந்துபோகிறார்கள் என்கிறார் கொரோனா. இந்தப் பெயரினாலேயே கோட்டயம் முழுவதும் அறிந்த ஒரு நபராகிவிட்டார்.

’’கொரோனாவுடன் வாழப்பழகுவது என்ன… நான் குடித்தனமே நடத்துகிறேன்’’-ஆச்சரியப்படுத்தும் கேரள இளைஞர்!

எங்காவது ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ தெறித்து ஓட வைக்கும் படி செய்துவிட்டது கொரோனா. ஆனால், இந்த கொரோனா எதிர்படும்போது எல்லோரும் ஹாய் சொல்லிவிட்டு போகிறார்கள்.

கொரோனாவின் தாக்கம் இன்னும் சில ஆண்டுகள் இருக்கும் என்பதால் அதுவரையிலும் கொரோனாவுடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள். ஆனால், ஷைன்தாமஸோ, ’’கொரோனாவுடன் வாழப்பழகுவது என்ன… நான் குடித்தனமே நடத்துகிறேன்’’என்று சிரிக்கிறார்.