தமிழக வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கேரள இளைஞர் கைது!

 

தமிழக வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கேரள இளைஞர் கைது!

தேனி

தேனி மாவட்டம் தமிழக – கேரள எல்லையில் தமிழக வனத்துறையினர் மீது துப்பாக்கியால் சுட்ட கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டத்தில் தமிழக – கேரள எல்லையில் உள்ள தமிழக வனப் பகுதியில் சிலர் வன விலங்குகளை வேட்டையாடுவதாக கம்பம் மேற்கு வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடந்த ஜூன் 30ஆம் தேதி இரவு வனத்துறையினர் செல்லார் கோயில் மெட்டு வனப் பகுதியில் ரோந்து சென்றனர்.

தமிழக வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கேரள இளைஞர் கைது!

அப்போது, அங்கு அரிவாள், துப்பாக்கி, வெடி மருந்துகளுடன் நின்றிருந்த கேரள வேட்டைக்காரர்கள் தமிழக வனத்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், தமிழக வனத்துறையை சேர்ந்த காஜாமைதீன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, தமிழக வனத்துறையினர் பதில் தாக்குதல் நடத்தியதால் வேட்டைக்காரர்கள் கேரள வனப் பகுதிக்குள் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து, வனத்துறையினர் அளித்த புகாரின் பேரில், கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று வனப்பகுதியில் ரோந்து சென்ற நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனத்துறையினரை துப்பாக்கியால் சுட்ட கும்பலை சேர்ந்த குமுளி அடுத்த முருக்கடி பகுதியைச் சேர்ந்த சோஜன்(35) என்பவரை கைது செய்தனர்.