வயலில் எலித் தொல்லை என்று பாம்பு வாங்கினார்! – இளம் பெண் கொலை வழக்கில் சிக்கிய பாம்பு பிடிப்பவர் புலம்பல்

 

வயலில் எலித் தொல்லை என்று பாம்பு வாங்கினார்! – இளம் பெண் கொலை வழக்கில் சிக்கிய பாம்பு பிடிப்பவர் புலம்பல்

கேரளாவில் இளம் பெண் ஒருவர் பாம்பு விட்டு கடிக்க வைத்து கொலை செய்த வழக்கில் பாம்பை விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். வயலில் எலித் தொல்லை அதிகமாக உள்ளது என்று கூறி பாம்பை வாங்கினார், இப்படி கொலை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் இளம் பெண் உத்ரா பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சந்தேகம் எழவே போலீசார் விசாரணை நடத்தினர். இதில், உத்ராவின் கணவன் சூரஜ் பாம்பை விட்டு கொலை செய்தது தெரியவந்தது.

வயலில் எலித் தொல்லை என்று பாம்பு வாங்கினார்! – இளம் பெண் கொலை வழக்கில் சிக்கிய பாம்பு பிடிப்பவர் புலம்பல்
உத்ராவை ஏற்கனவே ஒரு முறை பாம்பு கடித்தது. ஆனால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றப்பட்டார். அதன் பிறகு இரண்டாவது முறையாக மாடி வீட்டில் பாம்பு வந்து கடித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சூரஜ் போன் கால்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சுரேஷ் என்ற பாம்பு பிடிக்கும் நபருடன் சூரஜ் அடிக்கடி பேசியது தெரியவந்துள்ளது. அவரை பிடித்து விசாரித்த போது பல தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார் சுரேஷ். இவருக்கு பாம்பு பிடிப்பது ரொம்பவும் பிடிக்கும். யூடியூப் பார்த்து பாம்பு பிடிப்பதை கற்றுக்கொண்டு முயற்சியும் செய்துள்ளார். பிடித்த பாம்பை வைத்து வீடியோ எடுத்து அதை யூடியூபில் வெளியிட்டு பிரபலமாகி இருக்கிறார் சுரேஷ்.

வயலில் எலித் தொல்லை என்று பாம்பு வாங்கினார்! – இளம் பெண் கொலை வழக்கில் சிக்கிய பாம்பு பிடிப்பவர் புலம்பல் வயலில் எலித் தொல்லை என்று பாம்பு வாங்கினார்! – இளம் பெண் கொலை வழக்கில் சிக்கிய பாம்பு பிடிப்பவர் புலம்பல்

இதனால், அந்த பகுதியில் எங்கு பாம்பு நுழைந்தாலும் சுரேஷை அழைத்து பிடிக்கச் சொல்வது வாடிக்கையானது. இந்த வீடியோவைப் பார்த்து சூரஜ் தொடர்புகொண்டுள்ளார்.
வீட்டில் எலித் தொல்லை அதிகமாக உள்ளது. பாம்பு விட்டால் எலி ஓடிவிடும் என்று சொல்கிறார்கள், ஒரு பாம்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். சுரேஷ் இது உண்மை என்று நம்பி பாம்பை கொடுத்துள்ளார். இரவு முழுவதும் வீட்டில் இருக்கட்டும், அடுத்த நாள் காலை வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதை வைத்து மனைவி உத்ராவை கடிக்க விட்டுள்ளார் சூரஜ். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் உத்ரா உயிர் தப்பினார்.
அடுத்த நாள் சுரேஷை தொடர்புகொண்ட சூரஜ், பாம்பு தப்பிவிட்டது என்று கூறியுள்ளார். அதற்கு பணமும் கொடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து மீண்டும் சுரேஷை தொடர்புகொண்ட சூரஜ், தன்னுடைய வயலில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே, அதிக விஷமுள்ள பாம்பு வேண்டும். அதை விலைக்கு வாங்கிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அவரும் கருமூர்க்கன் பாம்பை கொடுத்துள்ளார். இந்த பாம்புதான் உத்ராவை கடித்தது. உத்ரா பாம்பு கடித்து இறந்த செய்தி, கணவன் கைது செய்யப்பட்டது, கொல்லப்பட்ட பாம்பு படங்களை எல்லாம் செய்தித்தாளில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் சுரேஷ்.

வயலில் எலித் தொல்லை என்று பாம்பு வாங்கினார்! – இளம் பெண் கொலை வழக்கில் சிக்கிய பாம்பு பிடிப்பவர் புலம்பல்
சூரஜ் தன்னை ஏமாற்றி பாம்பு வாங்கி, அதை விட்டு மனைவியைக் கொலை செய்திருப்பது தெரிந்தது. இது பற்றி உடனடியாக போலீசை தொடர்புகொண்டு சொல்லிவிடுங்கள் என்று சுரேஷின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால் பயம் காரணமாக சுரேஷ் அமைதி காத்து வந்துள்ளார். போன் பேசியது அடிப்படையில் நம்பரை வைத்து நபரை கைது செய்துள்ளனர் கேரள போலீசார். சுரேஷ் மீது கொலைக்கு உதவியாக இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எலியைக் கொல்ல என்று நம்பவைத்து சூரஜ் தன்னை ஏமாற்றிவிட்டார். தனக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை. பாம்பை சட்டவிரோதமாக விற்றது தொடர்பாக நடவடிக்கை எடுங்கள், கொலை வழக்கு வேண்டாம் என்று கெஞ்சி வருகிறார் சுரேஷ். சம்பவம் தெரிந்த உடனே போலீசை அணுகியிருந்தால் இந்த அளவுக்கு பிரச்னை வந்திருக்காது என்று புலம்பி வருகின்றனர் சுரேஷின் குடும்பத்தினர்.