பாலக்காட்டில் மதுக்கடைகள் மூடல் எதிரொலி… கோவைக்கு படையெடுத்த கேரள மதுப்பிரியர்கள்!

 

பாலக்காட்டில் மதுக்கடைகள் மூடல் எதிரொலி… கோவைக்கு படையெடுத்த கேரள மதுப்பிரியர்கள்!

கோவை

கேரளாவில் இருந்து மதுவாங்க வரும் மதுப் பிரியர்களால், கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, 2 மாதங்களுக்கு பின்னர் கடந்த திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால், மதுதேடி திண்டுக்கல் மாவட்டத்திற்கு படையெடுத்து வந்த மதுப் பிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில், கோவையை ஒட்டி அமைந்து உள்ள, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலக்காடு மாவட்டத்தில் மதுக்கடைகள் அனைத்தையும் மூட, கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், அம்மாநில மதுப்பிரியர்கள், மது வாங்க கோவை மாவட்டத்திற்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டு வரும் கோவை மாவட்டம், மீண்டும் நோய் பரவலுக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

பாலக்காட்டில் மதுக்கடைகள் மூடல் எதிரொலி… கோவைக்கு படையெடுத்த கேரள மதுப்பிரியர்கள்!

தமிழக – கேரள எல்லை பகுதியான பொள்ளாச்சி, பாலக்காடு இடையே 6 வழித்தடங்கள் உள்ளதால், அம்மாநிலத்தில் இருந்து வருபவர்கள் எளிதாக தமிழகத்திற்குள் நுழைந்து மதுவை வாங்கி செல்ல முடிவதாக தெரிவித்து உள்ள கோவை வாசிகள், இதனால் வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக வேதனை தெரிவித்து உள்ளனர்.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக – கேரள மாநிலங்களை இணைக்கும் இந்த 6 வழித்தடத்திலும் பாதுகாப்பை பலப்படுத்தி சோதனையின் அடிப்படையில், அங்கிருந்து வரும் வாகனங்களை அனுப்பினால் நோய் பரவலை தடுக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.