• February
    25
    Tuesday

Main Area

Main



கேரள ஸ்டைல் சேப்பங்கிழங்கு 'செம்பு பால் கறி '..!

taro milk curry
taro milk curry

கேரள உணவுகளில் அசைவத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதற்கு இணையாக வெஜ் சமையலிலும் ஏகப்பட்ட  வெரைட்டி காட்டி அசத்துவார்கள். எந்த உணவாக இருந்தாலும் அதில் தேங்காய் முக்கிய  இடம் பிடித்திருக்கும்.அவர்களின் ஸ்பெஷலுக்கு அதுவும் ஒரு காரணம். அந்த வரிசையில், தேங்காய், சேப்பங்கிழங்கு சேர்த்து சமைக்கும் ஒரு புதிய ரெசிபி உங்களுக்காக… இந்த ரெசிபியை கேரளாவில்  'செம்பு பால் கர்ரி' என்று அழைக்கிறார்கள்..

taro

செய்ய தேவையான பொருட்கள்:

1.சேப்பங்கிழங்கு - 1 கப் 
2.தேங்காய் பால் - 2 கப்
3.வெங்காயம் - 2
4.கேரட் - 1
5.இஞ்சி - 1 டீஸ் ஸ்பூன் 
6.கரம் மசாலா - 1/2 டீஸ் ஸ்பூன் 
7.பச்சை மிளகாய் - 4
8.தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு 
9.கறிவேப்பிலை - தாளிக்க 
10.உப்பு தேவையான அளவு 

எப்படிச் செய்வது

முதலில் சேப்பங்கிழங்கை தோல் சீவி நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.அதன் பிறகு கழுவிய சேப்பங்கிழங்கை வேகவைத்து தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளவும்.அதன் பிறகு வானிலையில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி,பச்சை மிளகாய்,வெங்காயம்,கேரட்,கரம் மசாலா ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.நல்லா பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் தேங்காய் பாலை சேர்த்துக்கொள்ளவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க வையுங்கள்.இப்போது  வேகவைத்த சேப்பங்கிழங்கை சேர்த்துக்கொள்ளவும்

இந்த கலவை நன்கு இறுகிய பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்துவிட்டு, taro 
கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். அதற்கு மேல்  சிறிது தேங்காய் எண்ணெயை தெளித்துவிட்டால் சுவையான 'செம்பு பால் கறி' ரெடி.இதை சாதத்தில் பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.

2018 TopTamilNews. All rights reserved.