போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியை தழுவிய கேரள பாஜக தலைவர்!

 

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியை தழுவிய கேரள  பாஜக தலைவர்!

கேரளா

கேரள சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தோல்வியை தழுவினார்.

கேரள மாநில பாஜக தலைவராக இருப்பவர் சுரேந்திரன். இவர் கேரள சட்டமன்ற தேர்தலில் பத்தினம் திட்டா மாவட்டம் கென்னி மற்றும் மஞ்சேஸ்வர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

இந்த நிலையில் இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், மஞ்சேஸ்வர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் ஏ.கே.எம். அஸ்ரபிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் சுரேந்திரன் பின் தங்கி உள்ளார்.

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியை தழுவிய கேரள  பாஜக தலைவர்!

இதேபோல், கொன்னி தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜெனிஷ்குமாரை விட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் அவர் பின்தங்கி 3-வது இடத்தினை பிடித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 93 இடங்களிலும், காங்கிரஸ் 43 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.