கேரளாவில் கிடுகிடுவென உயர்கிறது கொரோனா பாதிப்பு!

 

கேரளாவில் கிடுகிடுவென உயர்கிறது கொரோனா பாதிப்பு!

கேரளாவில் கிடுகிடுவென உயர்கிறது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அம்மாநில மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கேரளாவில் கிடுகிடுவென உயர்கிறது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்று என்பது கேரளாவில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வர தொடங்கியது. காரணம் அம்மாநில அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது தான். இதனால் கடந்த சில வாரங்களாகேவே கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் மீண்டும் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது.

கேரளாவில் கிடுகிடுவென உயர்கிறது கொரோனா பாதிப்பு!

நேற்று ஒரேநாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31,445 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 215 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கடந்த 2 நாட்களில் இறப்பு எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் தொற்று பரவல் விகிதம் 19.03 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்வதால் கேரளாவில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.