சைபர் குற்றங்களுக்கு எதிரான அவசர சட்டம் வாபஸ்! பின்வாங்கிய கேரள அரசு

 

சைபர் குற்றங்களுக்கு எதிரான அவசர சட்டம் வாபஸ்! பின்வாங்கிய  கேரள அரசு

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய சட்டத்தை கேரள அரசு நிறுத்திவைத்துள்ளது.

சமூக வலைதளங்களில் மிரட்டல், பிறர் மனம் புண்படும்படி திட்டுதல், அவமானப்படுத்துதல், அவதூறு பரப்புவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் வகையில் கேரள காவல்துறை அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு செய்தியாளர் சங்கம், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

சைபர் குற்றங்களுக்கு எதிரான அவசர சட்டம் வாபஸ்! பின்வாங்கிய  கேரள அரசு

இதனையடுத்து கேரள காவல்துறையின் அவசர சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவைக்குமாறு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சட்டத்தை அறிவித்த முதல்நாளே அதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் இந்த சட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என பினராயி விஜயன் தெரிவித்தார்.