கோவையில் ரூ.1.8 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்- 2 பேரை கைதுசெய்த கேரள போலீசார்!

 

கோவையில் ரூ.1.8 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்- 2 பேரை கைதுசெய்த கேரள போலீசார்!

கோவை

கோவையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.8 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த கேரள தனிப்படை போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

கேரள மாநிலம் கொச்சி நகரம் பேரூர் காவல் நிலைய போலீசாருக்கு, கேரளா மற்றும் கோவை பகுதிகளில் சிலர் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கேரள தனிப்படை போலீசார், நேற்று கோவை கரும்புக்கடை வள்ளல் நகரை சேர்ந்த அஸ்ரப் (24) என்பவரை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

கோவையில் ரூ.1.8 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்- 2 பேரை கைதுசெய்த கேரள போலீசார்!

விசாரணையின் போது அவர் அளித்த தகவலின் அடிப்படையில், உக்கடம் அல்-அமீன் காலனியை சேர்ந்த செய்யது சுல்தான் (32) என்பவரது வீட்டில் கேரளா மற்றும் கோவை போலீசார் இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செய்யது சுல்தான் வீட்டில் புழக்கத்தில் விடுவதற்காக கட்டுக் கட்டாக 2000 கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, சுமார் 90 கட்டுகளில் இருந்த 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் கள்ள நோட்டகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அஸ்ரப் மற்றும் செய்யது சுல்தான் ஆகிய 2 பேரையும் கைது செய்த கேரள தனிப்படை போலீசார், அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.