கேரளாவில் குழந்தைகள் ஆபாச படங்கள் வைத்திருந்த 47 பேர் கைது!

 

கேரளாவில் குழந்தைகள் ஆபாச படங்கள் வைத்திருந்த 47 பேர் கைது!

தற்போது குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன. குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பார்ப்போரையும் அதை இணையத்தில் பதிவிடுவோர்களையும் தீவிரமாக கண்காணித்து உடனடியாக கைது செய்து வருகின்றனர் காவல்துறையினர்.

இதுகுறித்து கேரளாவில் காவல்துறையினர் நடத்திய ரெய்டில் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் ஆபாச படம் வைத்திருந்ததாக மேலும் 89 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் குழந்தைகள் ஆபாச படங்கள் வைத்திருந்த 47 பேர் கைது!

143 மொபைல் போன்கள், மோடம்கள், ஹார்ட் டிஸ்க்குகள், மெமரி கார்டுகள் மற்றும் சில கம்ப்யூட்டர்களையும், காவல்துறையினர் இந்த சோதனையில் பறிமுதல் செய்துள்ளனர். மீட்கப்பட்ட அனைத்து பொருட்களிலும் குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கேரளா பகுதியைச் சேர்ந்த 6 முதல் 15 வயதுள்ள சிறு குழந்தைகளின் வீடியோவே அதிகம் காணப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெய்டில் கைது செய்யப்பட்ட அனைவரும் தொடர்ச்சியாக குழந்தைகள் வன்கொடுமை மற்றும் ஆபாச படங்களை இணையத்தில் பதிவிட்டு வரும் நபர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் குழந்தைகள் ஆபாச படங்கள் வைத்திருந்த 47 பேர் கைது!

ஊரடங்கு நேரத்தில் இந்த மாதிரியான வீடியோக்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறுவதாகவும் மக்கள் அதனை அதிகம் பார்க்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளில் உள்ள ஆபாச குழுக்கள் தான் இதுபோன்ற வீடியோக்கள் அதிகம் பகிரப்பட காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குழந்தைகள் ஆபாச படங்கள் பார்ப்பது அவற்றை உருவாக்குவது மற்றும் அவற்றை சேமித்து வைத்திருப்பது ஆகிய குற்றங்களுக்கு ஐந்து வருடங்கள் சிறை மற்றும் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.