கோவில் சொத்துக்களை விற்க முயற்சி? – ஆந்திராவைத் தொடர்ந்து கேரளாவில் வெடிக்கும் சர்ச்சை!

 

கோவில் சொத்துக்களை விற்க முயற்சி? – ஆந்திராவைத் தொடர்ந்து கேரளாவில் வெடிக்கும் சர்ச்சை!

குருவாயூர் கோவில் நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்புப் பணிக்கு ரூ.5 கோடி வழங்கியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கோயில் சொத்துக்களை கேரள அரசு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு காரணமாக மிகக் கடும் நிதி நெருக்கடியை ஒவ்வொரு மாநில அரசுகளும் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் கேரள தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் அளித்த பொருட்களை விற்பனை செய்து நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் சொத்துக்களை விற்க முயற்சி? – ஆந்திராவைத் தொடர்ந்து கேரளாவில் வெடிக்கும் சர்ச்சை!
கோவிலில் குவிந்து கிடக்கும் பித்தளை விளக்குகள், பயன்படுத்த முடியாத பழைய பொருட்கள், பாதுகாப்பில் உள்ள, பயன்படுத்தப்படாத தங்கம், வெள்ளி போன்றவற்றை ஏலம் விட்டு அந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய கேரள தேவசம் போர்டு முடிவு செய்தது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு கூறுகையில், “தேவசம் போர்டு நிதி நெருக்கடியை சமாளிக்க அனைத்து வழிகளையும் தேடுகிறது. அனைத்து கோவில்களிலும் பயன்படுத்தப்படாத விளக்குகள் பல குவிந்து கிடக்கின்றன. அவற்றை விற்று நிதிதிரட்ட முயற்சிக்கிறோம்” என்றார்.

கோவில் சொத்துக்களை விற்க முயற்சி? – ஆந்திராவைத் தொடர்ந்து கேரளாவில் வெடிக்கும் சர்ச்சை!
இது குறித்து இந்து அமைப்புகள் கூறுகையில், “குருவாயூர் கோவில் நிதியில் இருந்து ரூ.5 கோடியை கொரோனாவுக்காக கோவில் நிர்வாகம் வழங்கியது. கோவில் சொத்துக்களை கோவிலுக்கான நோக்கங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று சட்டம் கூறுகிறது. கோவில்கள் மூடப்பட்டதால் ஏராளமான ஊழியர்கள் வேலையில்லாமல் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்காத கேரள அரசு, மதரஸா ஊழியர்களுக்கு ரூ.1000 வழங்கியது. இந்து ஊழியர்களுக்கு நிதி உதவி செய்யாமல், கோவில் பணத்தை அரசுக்கு எதற்கு வழங்க வேண்டும்? கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு விட திட்டமிட்டு வருகின்றனர். பல சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சிகள் நடக்கிறது. இவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்கின்றனர்.

கோவில் சொத்துக்களை விற்க முயற்சி? – ஆந்திராவைத் தொடர்ந்து கேரளாவில் வெடிக்கும் சர்ச்சை!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தியதால் இந்துக்களின் வெறுப்பை பினராயி விஜயன் அரசு பெற்றது. கொரோனா பணியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கேரளாவை பின்பற்ற நினைக்கும் அளவுக்கு சிறப்பாக செயலாற்றி வருகிறது பினராயி விஜயன் அரசு. இந்த அரசு மீது எப்படியாவது வெறுப்பை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து தீவிர வலதுசாரி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில்தான் தெரியும்.