சாலையோரங்களில் மீன் விற்க தடை… ஓணம் பண்டிகையை வீட்டில் கொண்டாடுங்க… கேரள முதல்வர் வேண்டுகோள்

சாலையோரங்களில் மீன் விற்க தடை… ஓணம் பண்டிகையை வீட்டில் கொண்டாடுங்க… கேரள முதல்வர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. கேரளாவில் அம்மாநில அரசு முதலில் கொரோனா வைரஸ் பரவலை ஒரளவுக்கு கட்டுப்படுத்தியது. இருப்பினும் தற்போது அங்கு மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சாலையோரங்களில் மீன்கள் விற்க அம்மாநில அரசு மீண்டும் தடை விதித்துள்ளது.

சாலையோரங்களில் மீன் விற்க தடை… ஓணம் பண்டிகையை வீட்டில் கொண்டாடுங்க… கேரள முதல்வர் வேண்டுகோள்

கோட்டயத்தில் மீன் விற்பனை செய்து வரும் சசி குமார் என்பவர் இது குறித்து கூறியதாவது: விலை குறைவாக இருக்கும் மற்றும் தங்களது பொருளாதாரத்துக்கு ஏற்ப வாங்க முடியும் என்பதால்தான் மக்கள் சாலையோரங்களில் விற்கப்படும் மீன்களை வாங்குகின்றனர். தற்போது எங்களிடம் பணம் இல்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதே கடினமாக இருக்கிறது. கோவிட்-19 பரவல் காரணமாக கோட்டயம் மக்கள் எங்களிடம் அதிகமாக மீன்களை வாங்குவது இல்லை என தெரிவித்தார்.

சாலையோரங்களில் மீன் விற்க தடை… ஓணம் பண்டிகையை வீட்டில் கொண்டாடுங்க… கேரள முதல்வர் வேண்டுகோள்

இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று முன்தினம் கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்வரும் ஓணம் பண்டிகையை மக்கள் தங்களது வீடுகளில் கொண்டாடுமாறு வலியுறுத்தினார். மேலும் மலர் விரிப்புகளுக்காக வெளியூரிலிருந்து பூக்கள் சப்ளை செய்தால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் உள்ளூரில் கிடைக்கும் பூக்களையே பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.