கேரள தங்க கடத்தல் வழக்கு: மேலும் இரண்டு பேர் கைது!

 

கேரள தங்க கடத்தல் வழக்கு: மேலும் இரண்டு பேர் கைது!

கேரளாவில் புயலைக் கிளப்பியுள்ள தங்கக்கடத்தல் விவகாரத்தில் மேலும் 2 பேரை சுங்கத்துறை கைது செய்துள்ளது.

30 கிலோ தங்கம் ஐக்கிய அமீரக துதரகத்தின் பெயரில் கடத்திவரப்பட்ட சம்பவத்தில் கேரள முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள ஐடி துறையில் பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. மேலும் துபாயில் அமீரகத்தின் போலி முத்திரையை பயன்படுத்தி தங்கம் கடத்த உதவிய ஃபைசலை பிடிக்க என்ஐஏ தீவிரம் காட்டிவருகிறது. இந்த விவகாரத்தில் ஸ்வப்னாவுக்கு உதவிய சரித்குமாரை சுங்கத்துறை கைது செய்து விசாரித்துவருகிறது. மேலும் கடத்தல் தங்கத்தை விற்க உதவியதாக மேலும் 3 பேரை நேற்று சுங்கத்துறை கைது செய்துள்ளது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜலால், மலப்புரத்தைச் சேர்ந்த .முகமது ஷாஃபி, கொன்டோட்டியைச் சேர்ந்த ஹம்ஜத் அலி ஆகியோர் கடத்தல் தங்கத்தை விற்க உதவியதாக கொச்சி சுங்கத்துறை தெரிவித்தது. அந்த மூவரும் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு இம்மாதம் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி கொச்சி பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கேரள தங்க கடத்தல் வழக்கு: மேலும் இரண்டு பேர் கைது!

கேரள தங்க கடத்தல் வழக்கில் கேரள அரசின் முன்னாள் அரசு தலைமைச் செயலர் சிவசங்கரன் “சஸ்பெண்ட்” செய்யப்பட்டிருப்பதாகவும், துறை ரீதியான விசாரணை நடைபெறும் எனவும் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதற்கிடையில் தங்க கடத்தல் தொடர்புடைய மலப்புரத்தைச் சேர்ந்த முகமது அன்வர், சையது ஆலவி ஆகியோரை இன்று சுங்கத்துறை கைது செய்ததுள்ளது