கேரள கர்ப்பிணி யானை உயிரிழப்பு ஓர் விபத்து- மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்

 

கேரள கர்ப்பிணி யானை உயிரிழப்பு ஓர் விபத்து- மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்

கேரளாவில் உயிரிழந்த கர்ப்பிணி யானை, வெடிமருந்து வைக்கப்பட்ட பழத்தை தற்செயலாக உண்டிருக்கலாம் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் உணவு தேடி ஊருக்குள் வந்தகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து நிரம்பிய அன்னாசி பழத்தை உள்ளூர் மக்கள் கொடுத்ததால், அந்த பழத்தை தின்று தாடை உடைந்து 27ஆம் தேதி யானை உயிரிழந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் யானை இறந்தது தொடர்பான முதல்கட்ட விசாரணையில் வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தை யானை தற்செயலாக சாப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்தியசுற்றுச்சூழல் துறை அமைச்சகம், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளோம் என கூறியுள்ளது. பாலகாட்டு வனப்பகுதியில் உள்ள மக்கள் பலமுறை இது போல காட்டுப்பன்றிகள் விளைநிலத்துக்குள் வராமல் தடுக்க பழத்தில் வெடிமருந்து நிரப்பி கொலை செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளதென சுற்றுசூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.