கேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம்: போலீசார் 3 பேரிடம் விசாரணை

 

கேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம்: போலீசார் 3 பேரிடம் விசாரணை

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து உணவு தேடி சென்ற கர்ப்பிணி யானையை சிலர் அண்ணாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்து உணவு அளித்ததாகவும், அதனால் தான் அந்த யானை உயிரிழந்து விட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இரக்கமில்லாமல் மனிதர்கள் நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையில் அப்பகுதி மக்கள் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை காக்க அண்ணாச்சி பழத்தில் வெடிமருந்து வைப்பது வழக்கம் என்றும் பசியில் வந்த யானை அதனை உண்டு விட்டதாகவும் வனத்துறையினர் விளக்கமளித்திருந்தனர்.

கேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம்: போலீசார் 3 பேரிடம் விசாரணை

இந்நிலையில் கேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம் காரணமாக போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி விரைவில் சிக்குவார் அதனால் நீதி நிலைநாட்டப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெடி வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தை தின்றதால் காட்டு யானை உயிரிழந்தது.