கேரளாவில் மேலும் 61 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,269 ஆக உயர்வு

இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்தும், தமிழகம் 6, மகாராஷ்டிரா 20 பேர் என 37 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 4 பேருக்கு நோயாளிகளின் தொடர்புகளால் நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. 15 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதையடுத்து கேரளாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 624ல் இருந்து 670 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கேரளாவில் கொரோனாவால் 1,269 பேர் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர், 590 பேர் குணமடைந்துள்ளனர்,”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசை இருந்தால் அதை அதிமுக அரசு நிறைவேற்றும் : அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

மும்மொழிக்கொள்கைக்கு கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படும் என்று பலரும் நினைத்திருந்த நிலையில் முதல்வர் எட்பாடி மும்மொழிக்கொள்கைக்கு பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து...

10ம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் குழப்பம்! – விசாரணை நடத்தும் பள்ளிக் கல்வித் துறை

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொடர்பான குழப்பம் நீடித்து வரும் நிலையில், இது பற்றி பள்ளிக் கல்வித் துறை ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில்...

’மகனுக்கே அபாரதம் விதித்த கிறிஸ் பிராட்’ இங்கிலாந்து கிரிக்கெட்டின் விநோதம்!

பாகிஸ்தான் – இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இத்தொடரில் மொத்தம் 3 போட்டிகள். அவற்றில் முடிவடைந்த ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. ஆனால், இறுதிவரை பாகிஸ்தான்...

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது அரசின் கொள்கை முடிவு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்களில் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் அரசு ரூ.68 கோடி டெபாசிட்...
Do NOT follow this link or you will be banned from the site!