கேரளாவில் மேலும் 7,673 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 2.53 லட்சமாக உயர்வு

 

கேரளாவில் மேலும் 7,673 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 2.53 லட்சமாக உயர்வு

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 75 லட்சத்து ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆறு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

கேரளாவில் மேலும் 7,673 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 2.53 லட்சமாக உயர்வு

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று அதிகபட்சமாக மேலும் 7,673 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 6,685 பேருக்கு நோய் பாதிப்புடைய தொடர்புகளால் பாதிக்கப்பட்டனர். இன்று 8,410 பேர் குணமடைந்த நிலையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை 95,200 பேர் மருத்துவமனை சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,53,405 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2,45,399 பேர் குணமடைந்தனர். மொத்த உயிரிழப்பு 1,161. நேற்று மட்டும் 58,404 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.