Home இந்தியா கேரளாவில் இன்று அதிகபட்சமாக 1,083 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 27,956 ஆக உயர்வு!!

கேரளாவில் இன்று அதிகபட்சமாக 1,083 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 27,956 ஆக உயர்வு!!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 18 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை 12 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று அதிகபட்சமாக மேலும் 1,083 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 51 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 64 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 902 பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 87 ஆக அதிகரித்து உள்ளது. இன்று 1,083 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,303 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் மொத்தம் 27,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சையில் இருப்போர் 11,540 பேர் மட்டுமே” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தனது பங்கை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தனது பங்கினை பாகிஸ்தான் நேற்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. 2019 பிப்ரவரி 14ம் தேதியன்று...

கேரளா மாதிரி பழங்கள், காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவியுங்க…. பஞ்சாப் அரசை நெருக்கும் எஸ்.ஏ.டி…

கேரளாவை பின்பற்றி, நம் மாநிலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவியுங்க என்று பஞ்சாப் அரசு எஸ்.ஏ.டி. கட்சி வலியுறுத்தியுள்ளது. கேரளாவில் முதல்வர்...

நாட்டின் பிரதமர் என்பதால் எதையும் மோடியால் பேச முடியும்… தேஜஸ்வி யாதவ் பதில்

பிரதமர் மோடி தன்னை காட்டாட்சி இளவரசர் என்று கூறியது குறித்து பதிலளிக்கையில், நாட்டின் பிரதமர் என்பதால் அவரால் எதுவும் பேச முடியும் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

அகிலேஷ் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க பா.ஜ.க.வுக்கு கூட ஓட்டு போடுவோம்… மாயாவதி ஆவேசம்

மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தலில் அகிலேஷ் யாதவ் கட்சி (சமாஜ்வாடி) வேட்பாளரை தோற்கடிக்க பா.ஜ.க.வுக்கு கூட ஓட்டு போடுவோம் என மாயாவதி தெரிவித்தார். உத்தர பிரதேசத்திலிருந்து காலியாக...
Do NOT follow this link or you will be banned from the site!