Home தமிழகம் கேரளாவில் இன்று1,129 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 24,742 ஆக உயர்வு!!

கேரளாவில் இன்று1,129 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 24,742 ஆக உயர்வு!!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூலை 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 17லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 11லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 511 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று அதிகபட்சமாக மேலும் 1,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 89 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 114 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 880 பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று 8 பேர் உயிரிழந்த நிலையில் அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81 ஆக அதிகரித்து உள்ளது. இன்று 752 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,729 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் மொத்தம் 24,742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சையில் இருப்போர் 10,862 பேர் மட்டுமே” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

கோவை: கஞ்சா விற்பனை – கேரளாவை சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் துடியலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைதுசெய்தனர். துடியலூர் அடுத்த தடாகம் பகுதியில் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் தலைமையில்...

‘இந்தியாவிலேயே முதன்முறையாக’ வழக்கு விசாரணையை நேரலை செய்த குஜராத் நீதிமன்றம்!

குஜராத் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை நேரலை செய்யப்பட்டது, மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் மால்கள், தியேட்டர்கள்...

காரைக்கால்: பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – பக்தர்கள் சுவாமி தரிசனம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மேலகாசாகுடியில் உள்ள பழமையான பத்ரகாளி அம்மன் கோயிலில், மகா கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. கோவிலின் புனரமைப்பு திருப்பணிகள் முடிவுற்றதையடுத்து, கும்பாபிஷேக விழா நேற்று...

கடைசி இடத்தில் சென்னை… மற்ற அணிகள்? ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்!

ஐபிஎல் 2020 போட்டிகள் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன. இதுவரை மட்டுமே 4 ஆட்டங்களில் சூப்பர் ஓவர் மூலம் வெற்றி, தோல்வி முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஒரே நாளில் இரண்டு சூப்பர்...
Do NOT follow this link or you will be banned from the site!