Home இந்தியா கேரளாவில் அதிகபட்சமாக 272 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 5,894ஆக உயர்வு!!

கேரளாவில் அதிகபட்சமாக 272 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 5,894ஆக உயர்வு!!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 7,23,185ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,41,112 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,198 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று அதிகபட்சமாக மேலும் 272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 157 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 38பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 68 பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து, அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்து உள்ளது. இன்று 111 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,452ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் மொத்தம் 5,894 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா பாதிப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 60 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய...

தொடர் உடற்பயிற்சி சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்!

தொடர் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு மிகப்பெரிய அளவில் குறைகிறது என்று மீண்டும் ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்வதால் ஏராளமான நன்மைகள்...

முதல்வருடன் ஜி.கே.வாசன் சந்திப்பு- தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதேபோல் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தாமக உள்ளிட்ட...

வைகோ உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது… மதிமுக 6 இடங்களில் போட்டி!

தொடக்கம் முதலே திமுக-மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முட்டிக்கொண்டு தான் இருந்தது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இரு குழுக்களும் இடையே கடும் விவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே மதிமுக கூட்டணியிலிருந்து...
TopTamilNews