கொரோனாவின் பிடியில் கடவுள்தேசம்! ஒரே நாளில் 62 பேருக்கு நோய் தொற்று!

 

கொரோனாவின் பிடியில் கடவுள்தேசம்! ஒரே நாளில் 62 பேருக்கு நோய் தொற்று!

கேரளாவில் முதன்முறையாக அதிகபட்சமாக நேற்று 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமையான இன்று அதைவிடவும் அதிகமாக 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலக்காடு 19, கண்ணூர் 16, மலப்புரம் 8, ஆலப்புழா 5, கோழிக்கோடு 4, காசர்கோடு 4, கொல்லம் 3, கோட்டயம் 2, வயநாடு 1 என முதன்முறையாக அதிகபட்சமாக 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதில் 7 சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட நோயாளிகளின் தொடர்பில் இருந்த 13 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று ஏற்பட்டவர்களில் மாகாராஷ்டிராவில் இருந்து 13 பேர், தமிழகத்தில் இருந்து 12 பேர் என 31 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். 18பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் இன்று மூன்று பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவின் பிடியில் கடவுள்தேசம்! ஒரே நாளில் 62 பேருக்கு நோய் தொற்று!

இதையடுத்து கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 216ல் இருந்து 275 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்வர்கள் 794. பேர். இதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 515 பேர் குணமடைந்துள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.