கேரளாவில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று! சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 216 ஆக உயர்வு

 

கேரளாவில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று! சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 216 ஆக உயர்வு

கேரள மாநிலத்தில் மேலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் வெள்ளிக்கிழமையான இன்று கண்ணூர் 12, காசர்கோடு 7, கோழிக்கோடு, பாலக்காடு தலா 5, திருச்சூர் மலப்புரம் தலா 4, கோட்டயம் 2, கொல்லம், பத்தனம்திட்டா, வயனாடு தலா ஒருவர் என 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதில் 17 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தமிழகம், ஆந்திராவில் இருந்து தலா ஒருவர், 21 பேர் மகாராஷ்டிராவில் இருந்தும் வந்தவர்கள். இருவருக்கு பாதிப்புள்ளவர்களின் தொடர்புகளால் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று இரண்டு பேர் குணமடைந்துள்ளனர்.

கேரளாவில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று! சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 216 ஆக உயர்வுஇதையடுத்து கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 177ல் இருந்து 216 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்வர்கள் 732 பேர். இதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிகை 512 ஆக உயர்ந்துள்ளது” எனக்கூறினார்.