கேரளாவில் மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 3,33,380ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,69,987பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,524ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கேரளாவில் திங்கட்கிழமையான இன்று மேலும் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 49 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 23 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 9 பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கொரோனாவால் பதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆனது. 73 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதையடுத்து கேரளாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 1,340 ல் இருந்து 1,348 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 2,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,174 பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

ஆன்லைனில் ரம்மி விளையாடிய காவலர் தூக்கிட்டு தற்கொலை!

ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய காவலர் ஆனந்த். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்....

காட்டுப் பகுதி… எல்லை மீறிய காதல் ஜோடி… வீடியோ எடுத்த கும்பல்!- கடைசியில் நடந்த பரிதாபம்

காட்டுப் பகுதியில் காதல் ஜோடி எல்லை மீறி கொண்டிருந்ததை வீடியோ எடுத்து கும்பல் ஒன்று அவர்களை மிரட்டி பணம், செல்போனை கொள்ளையடித்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார் தற்போது ஊரடங்கு...

கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 17 பேர் பலி !

கேரளாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம்  துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது...