கேரளாவில் மேலும் 111 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,697 ஆனது!!

 

கேரளாவில் மேலும் 111 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,697 ஆனது!!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 2,27,273ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,09,462பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,367ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

கேரளாவில் மேலும் 111 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,697 ஆனது!!

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் வெள்ளிக்கிழமையான இன்று முதன் முறையாக முன்று இலக்கத்தில் மேலும் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 50 பேர் வெளிநாடுகளில் இருந்தும், தமிழகம் 10, மகாராஷ்டிரா 25 என 48 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். மூன்று சுகாதாரப் பணியாளர் உட்பட 13 பேருக்கு பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 22 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கேரளாவில் மேலும் 111 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,697 ஆனது!!

இதையடுத்து கேரளாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 884 ல் இருந்து 973 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 1,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 14 ஆக உள்ளது நோயிலிருந்து 710 பேர் குணமடைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.