Home இந்தியா கேரளாவில் மேலும் 193 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 5,622 ஆக உயர்வு!!

கேரளாவில் மேலும் 193 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 5,622 ஆக உயர்வு!!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 7,00,724ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,25,568 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,714 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று மேலும் 193பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 92பேர் வெளிநாடுகளில் இருந்தும், 65பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 38பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27ஆக அதிகரித்து உள்ளது. இன்று 17பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,341ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் மொத்தம் 5,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“தமிழகத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பு” – விஜய பிரபாகரன் பேட்டி

மதுரை தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு உள்ளதாக, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் இளைய மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்....

காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் திமுகவுக்கு ஆதரவு!

திமுகவுக்கு காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் ஆதரவு அளித்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான...

இலங்கைக்கு கடத்தமுயன்ற ரூ.16 லட்சம் மதிப்பிலான மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம் பாம்பனில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்தமுயன்ற 16 லட்சம் மதிப்பிலான ஒரு டன் மஞ்சளை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்து,...

இரு டி.ஜி.பிக்கள் என்றால் துறை யாருக்குக் கட்டுப்படுவது? – காவல்துறையின் இரட்டைத் தலைமையில் துரைமுருகன் கேள்வி

கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பதவி உயர்வு அளித்து -சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டி.ஜி.பி.யாக முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி நியமித்திருப்பது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடுமையாக...
Do NOT follow this link or you will be banned from the site!