கேரளாவில் மேலும் 131 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 4,442 ஆக உயர்வு

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 5,68,536ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 335,915 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,919ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று மேலும் 131பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 65பேர் வெளிநாடுகளில் இருந்தும், 46 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 19பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. இன்று 75 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,304 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 4,442 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.71 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. இந்த வாரத்தின் முதல் 2 தினங்களில் வர்த்தம் முதலீட்டாளர்களை ஏமாற்றியது. இருப்பினும் அதற்கு அடுத்த 3 நாட்களில் பங்கு...

ஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை!

ஊரடங்கு... எல்லோர் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் மாதக்கணக்கில் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறது. முதல்நாள் பார்த்த தன் தந்தையின் முகத்தை மறுநாள் காலையில் பார்த்த பிள்ளைகள் இப்போது நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்....

கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி அறிமுகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் வசதி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்து செல்வதற்காக...

ரத்தசோகை போக்கும் முளைக்கீரை வடை!

கீரை வடை... டீக்கடைகளிலும், ஹோட்டல்களிலும் சாப்பிட்ட இந்தக் கீரை வடையை வீடுகளிலும் செய்து சாப்பிடலாம். இன்றைய சூழலில் சுகாதாரமான, சுத்தமான உணவு கிடைக்குமா? என்ற ஏக்கம் உள்ளது. எனவே, நம் வீடுகளில் இந்தக்...
Open

ttn

Close