கேரளாவில் மேலும் 94பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,588 ஆனது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 2,17,967ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,04,371பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,094 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள்

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் வியாழக்கிழமையான இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 47 பேர் வெளிநாடுகளில் இருந்தும், தமிழகம் 8, மகாராஷ்டிரா 23 என 37 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 7 பேருக்கு பேருக்கு நோயாளிகளின் தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 39 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதையடுத்து கேரளாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 832 ல் இருந்து 884 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 1,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொல்லம், பாலக்காடு, பலம்ப்புரம் தலா ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு 14 ஆக அதிகரித்துள்ளது. நோயிலிருந்து 690 பேர் குணமடைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

Most Popular

பேரனின் பொறுப்பில் திருநெல்வேலி இருட்டு கடை அல்வா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

நெல்லை நெல்லையப்பர் கோயில் கீழ ரத வீதியில் புகழ்பெற்ற இருட்டு கடை அல்வா 100 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்த அல்வா கடை தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநில மக்களின் பிரசித்தி...

’கருப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக அறப்போட்டம்!

கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்தவர்களைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் வரும் வியாழனன்று அறவழி கண்டனப் போராட்டம் நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்துக்களின் கடவுளர்கள் மற்றும்...

முழு முடக்கம் நீட்டிப்பா?- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கருத்து

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் மாநிலம் முழுக்க முழு ஊரடங்கு கொண்டுவரும் முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சென்னையில்...

ரூ.50 கோடி மதிப்புள்ள மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர நிதியமைச்சருக்கு திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஊழலை ஒழிக்கிறேன் என்ற பேரில் புழக்கத்தில் இருந்த ரூ 500, 1000 நோட்டுகள் செல்லாது எனக்கூறி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை...
Open

ttn

Close