கேரளாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சபரிமலை விவகாரம் தொடர்பாக சட்டம் இயற்றுவோம்.. காங்கிரஸ்

 

கேரளாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சபரிமலை விவகாரம் தொடர்பாக சட்டம் இயற்றுவோம்.. காங்கிரஸ்

கேரளாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சபரிமலை விவகாரம் (சபரிமலையில் பெண்கள் அனுமதி) தொடர்பாக சட்டம் இயற்றுவோம் என்று கேரள காங்கிரஸ் தலைவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

கேரள காங்கிரஸ் பிரிவு தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில் சபரிமலை விவகாரம் முக்கிய விஷயமாக இருக்கும். ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வரும்போது, சபரிமலையுடன் தொடர்புடைய சட்டத்தை (சபரிமலையில் பெண்கள் அனுமதி) உருவாக்குவோம். மத நம்பிக்கையாளர்களின் உணர்வுகள் புண்படாமல் முன்னேறுவதே எங்கள் நிலை. கேரள மாநில அரசால் (முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு) சட்டப்படி சட்டத்தை இயற்ற முடியவில்லை என்று கூறுவது உண்மையில் தவறு.

கேரளாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சபரிமலை விவகாரம் தொடர்பாக சட்டம் இயற்றுவோம்.. காங்கிரஸ்
காங்கிரஸ்

இடதுசாரி தலைமையிலான அரசு பெரும்பான்மையினரை திருப்திப்படுத்தி, சிறுபான்மையினரை ஒருவருக்கொருவர் எதிர்த்து நிறுத்துவதன் மூலம் முன்னேற முயற்சிக்கின்றனர். இதன் பின்னணியில் சி.பி.ஐ. (எம்)- பா.ஜ.க. உறவு குறித்து துல்லியமான தகவல்கள் கிடைத்துள்ளன. மதவாத வாக்குப்அடிப்படையில் பிரிக்கப்படுவதை மக்கள் தாமதமாக உணர்ந்தால், மாநிலம் மிகவும் அபாயத்தில் இருக்கும்.

கேரளாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சபரிமலை விவகாரம் தொடர்பாக சட்டம் இயற்றுவோம்.. காங்கிரஸ்
முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

படித்த இளைஞர்கள் பி.எஸ்.சி.க்கு தகுதியானவர்கள் மற்றும் பணி நியமனத்துக்காக காத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் சி.பி.ஐ. எம். தலைவர்களின் உறவினர்களுக்கு வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கின்றனர். மீனவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் பணியாற்றுவர்கள் மற்றும் பராம்பரிய துறைகளை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். ரமேஷ் சென்னிதாலா தலைமையில் நடைபெறும் ஐஸ்வர்ய கேரள யாத்திரையின் இறுதி அமர்வை ராகுல் காந்தி தொடங்கி வைப்பார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் அந்த யாத்திரையில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பர். நாட்டில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் மாநிலமாக கேரளா உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.