‘கனமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்’.. கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்

 

‘கனமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்’.. கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் கேரள மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் மீட்கப்பட்டு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக 80 பேர் நிலச்சரிவில் சிக்கியதாக வெளியான தகவலின் படி, மற்றவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது. தொடர் மழையால் மீட்புப் பணியில் சிக்கல் நீடித்து வரும் நிலையிலும், தொய்வின்றி வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

‘கனமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்’.. கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்

இந்த நிலையில் கனமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கனமழைக்கு தயாராக வேண்டும் என்றும் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மழையால் மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.