கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம் எளிமையாக இனிதே நடைபெற்றது

 

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம் எளிமையாக இனிதே நடைபெற்றது

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தேசிய தலைவர் முகமது ரியாஸை கரம் பிடித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தேசிய தலைவர் முகமது ரியாஸுக்கும் திருவனந்தபுரத்தில் இன்று எளிமையாக திருமணம் நடைபெற்றது. சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இந்த திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் இல்லத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் இந்த திருமண விழா நடந்து முடிந்தது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம் எளிமையாக இனிதே நடைபெற்றது

வீணா பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு சிறிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். அவர் ஆரக்கிள் நிறுவனத்தில் தனது மென்பொருள் பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதேசமயம் முகமது ரியாஸ் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தேசிய தலைவராக உள்ளார். இவர் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி அப்துல்காதரின் மகன் ஆவார்.

கேரள மாநிலத்தின் மிக முக்கிய திருமண நிகழ்வாக பார்க்கப்படும் இந்த விழாவில் தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் சஜீஷ் உள்ளிட்டோர் கலந்கொண்டனர்.