தங்கக் கடத்தல் வழக்கை திசைதிருப்பாமல் என்.ஐ.ஏ சுதந்திரமாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும்- பினராயி விஜயன்

தங்கக் கடத்தல் வழக்கை திசைதிருப்பாமல் என்.ஐ.ஏ சுதந்திரமாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும்- பினராயி விஜயன்

தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பிய நிலையில் இந்த விவகாரத்தில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ் கொச்சியில் உள்ள என். ஐ. ஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஸ்வப்னா சுரேஷ்க்கு, சந்தீப் நாயருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தங்க கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கை திசைதிருப்பாமல் என்.ஐ.ஏ சுதந்திரமாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும்- பினராயி விஜயன்

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி, “தங்க கடத்தல் வழக்கில் முதலில் என்.ஐ.ஏ., விசாரணையை தொடங்கட்டும். விசாரணை முடிவுகள் வரட்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தட்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை அரசு காப்பாற்றாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு பெண்மணி அரசுத்துறையில் பணியாற்றியது, அவர் போலிச் சான்று கொடுத்து பணியில் சேர்ந்தாரா என்பது குறித்து அரசு தலைமைச் செயலர் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அந்த பெண்மணியுடன் தொடர்பில் இருந்ததாக அரசு செயலாளார் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கை திசைதிருப்பாமல் என்.ஐ.ஏ சுதந்திரமாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும்- பினராயி விஜயன்

என்.ஐ.ஏ., விசாரணைக்குப்பின், அரசு செயலாளர் மீது வேறு குற்றச்சாட்டுகள் இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு எப்படியாவது நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக கூறி வருகின்றன. முதலில் இந்த வழக்கை செய்திகளால் திசை திருப்பாமல் என்.ஐ.ஏ.,வை சுதந்திரமான் விசாரணை நடத்த அனுமதியுங்கள். அவர்களின் விசாரணைக்கு அரசு அனைத்து முழு ஒத்துழைப்பும் நல்கும்,” என தெரிவித்தார்.