இடைத்தேர்தல் வேண்டாம்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

 

இடைத்தேர்தல் வேண்டாம்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

கேரளாவில் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்பது தொடர்பாக இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த தேர்தலோடு பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதில் கேரளாவில் காலியாக உள்ள குட்டநாடு மற்றும் சவரா ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளும் அடங்கும்.

இடைத்தேர்தல் வேண்டாம்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
பினராயி விஜயன்

கேரளாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அம்மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் நவம்பர் மாதம் குட்டநாடு மற்றும் சவரா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தினால் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ. 5 மாதங்கள் மட்டுமே பதவியில் இருப்பார். இதனால் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதால் நேரம், பணம் விரயமாகும். மேலும் கோவிட்-19 பரவல் காரணமாக வாக்குப்பதிவும் குறைவாகத்தான் நடக்கும். இதனால் அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் கேரள அரசு விரும்புகிறது. அதேவேளையில், இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக பல்வேறு கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளன.

இடைத்தேர்தல் வேண்டாம்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
இந்திய தேர்தல் ஆணையம்

அனைத்து கட்சிகளும் ஒருமனதாக இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று தெரிவித்தால் தன்னால் இடைத்தேர்தலை நிறுத்த முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இடைத்தேர்தல் நிறுத்துவது மற்றும் உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக ஆலோசனை செய்து ஒரு மனதாக முடிவை எடுக்கும் நோக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஒருமனதான முடிவு எடுக்கப்படும் என நம்புவதாக பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்தார்.