விமானப்படையின் உதவியை நாடினார் கேரள முதல்வர்; என்ன காரணம்?

 

விமானப்படையின் உதவியை நாடினார் கேரள முதல்வர்; என்ன காரணம்?

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரள மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி, பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. இன்று காலை திடீரென இடுக்கி மாவட்டத்தின் மூணாறு பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 80 பேர் மாயமானதாக காலை தகவல் வெளியான நிலையில், முதலில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். காணாமல் போன மக்கள், நிலச்சரிவில் மண்ணில் புதைந்திருக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விமானப்படையின் உதவியை நாடினார் கேரள முதல்வர்; என்ன காரணம்?

அதனால் மூணாறு பகுதிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இடுக்கி மாவட்டத்தின் கனமழை தொடரும் என்பதால் அம்மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் தீவிர நடவடிக்கை மூலம் மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை தொடருவதால் மீட்புப் பணியில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்திய விமானப்படையின் உதவியை கோரியுள்ளார். விரைவில் விமானப்படை அங்கு சென்று, மீட்புப் பணி இன்னும் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.