கேரள நிலச்சரிவு : ஆளுநர், முதல்வர் பினராயி விஜயன் சேதங்கள் குறித்து ஆய்வு!

கேரள நிலச்சரிவு : ஆளுநர், முதல்வர் பினராயி விஜயன் சேதங்கள் குறித்து ஆய்வு!

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் இருபது வீடுகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் இதுவரை 55 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கேரள நிலச்சரிவு : ஆளுநர், முதல்வர் பினராயி விஜயன் சேதங்கள் குறித்து ஆய்வு!

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 7 வது நாளாக மீட்புபணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறையினர், மோப்ப நாய் உதவியுடன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கேரள நிலச்சரிவு : ஆளுநர், முதல்வர் பினராயி விஜயன் சேதங்கள் குறித்து ஆய்வு!

இந்நிலையில் கேரளா மூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான், தொழில்துறை அமைச்சர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சேதங்களை  ஆய்வு செய்கின்றனர்.