திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானிக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் தீர்மானம்! – பினராயி அடுத்த அதிரடி

திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானிக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் தீர்மானம்! – பினராயி அடுத்த அதிரடி

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானிக்கு வழங்குவதை எதிர்த்து வருகிற 24ம் தேதி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியவின் வருமானம் கொழிக்கும் விமான நிலையங்களைத் தனியாருக்கு வழங்கி வருகிறது மத்திய அரசு. அந்த வகையில் கோழிக்கோ உள்ளிட்ட பல விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக திருவனந்தபுரம் விமான நிலையம் உள்ளிட்ட விமான நிலையங்களை அதானி குழுமத்துக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானிக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் தீர்மானம்! – பினராயி அடுத்த அதிரடி
திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானிக்கு வழங்க கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அப்படி வழங்கினால் அதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்காது என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் பினராயி விஜயன் கூறியிருந்தார். இந்த நிலையில் விமான நிலையத்தை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.

திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானிக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் தீர்மானம்! – பினராயி அடுத்த அதிரடி
விமான நிலைய விவகாரம் தொடர்பாக கானொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், “விமான நிலையம் அமைக்க நிலத்தை கேரள அரசு வழங்கியது. அதன் அடிப்படையில் முக்கிய பங்குதாரராக கேரள அரசு இருக்கும்போது அதை தனியாருக்கு குத்தகைக்கு விடும் முடிவை ஏற்க முடியாது. விமான நிலையத்துக்கான ஏலத்தில் கேரள தொழில் மேம்பாட்டுக் கழகமும் பங்கேற்றது. அதானி வழங்க முன் வந்த நிதியை கேரள தொழில் மேம்பாட்டு கழகமும் வழங்க முன்வந்தது. ஆனால் மத்திய அரசு கேரள அரசுக்கு அதை வழங்காமல் அதானிக்கு கொடுத்துள்ளது. கேரள அரசின் ஒத்துழைப்பின்றி தனியார் நிறுவனம் விமானநிலையத்தை பராமரிப்பது கடினம்” என்றார்.

திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானிக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் தீர்மானம்! – பினராயி அடுத்த அதிரடி
கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வருகிற 24ம் தேதி கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கேரள அரசின் எதிர்ப்புக்கு மத்திய அமைச்சர் வி.முரளிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கேரளாவில் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் விமான நிலையங்கள் தனியார் பராமரிப்பில்தான் உள்ளன. தங்கக் கடத்தல் பிரச்சினையைத் திசை திருப்ப பினராயி விஜயன் இதை எதிர்க்கிறார்” என்றார்.