கேரளா: திருமண விழாவில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா! பெண்ணின் அப்பா மீது வழக்கு

 

கேரளா: திருமண விழாவில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா! பெண்ணின் அப்பா மீது வழக்கு

கேரள மாநிலத்தில் திருமண விழாவில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா பரவல் உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து பெண்ணின் அப்பா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேரளா: திருமண விழாவில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா! பெண்ணின் அப்பா மீது வழக்கு
கேரள மாநிலம் கார்கோடு மாவட்டத்தில் செங்காலா என்ற இடத்தில் கடந்த 17ம் தேதி விமரிசையாக திருமண விழா நடந்தது. இதில், அரசு கட்டுப்பாடுகளை மீறி ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்றவர்களில் 43 பேருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மணமக்களும் அடங்குவர்.

கேரளா: திருமண விழாவில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா! பெண்ணின் அப்பா மீது வழக்குஇதைத் தொடர்ந்து திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை செய்த மணமகளின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அவர் மீது கேரள தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு உறுதியானால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இந்த திருமண விழாவில் பங்கேற்ற அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.